Drishyam (Photo Credit: @georgeviews X)

மார்ச் 1, புதுடெல்லி (New Delhi): இயக்குநர் ஜித்து ஜோசப் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் திரில்லர் வகையில் உருவான படம் தான் த்ரிஷ்யம். இப்படத்திற்கு மொத்தம் 2 பாகங்கள் வெளியாகியுள்ளது. இந்த இரண்டுமே மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து, அப்படத்தின் 3-ஆம் பாகம் குறித்து ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். அது தான் அப்படத்தின் இறுதி பாகமாக இருக்குமெனவும் சொல்லப்படுகிறது. Bangladesh Fire: வங்கதேசத்தில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து.. 45 பேர் பலி..!

இப்படத்தின் ஹிந்தி ரீமேக் ஆனது 2013-ல்அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியானது. அப்படத்தை பனோரமா ஸ்டூடியோஸ் தயாரித்திருந்தது. இந்த நிலையில், த்ரிஷ்யம் பாகங்களை ஹாலிவுட்டில் ரீமேக் செய்ய பனோரமா ஸ்டூடியோஸ் பிரபல ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்துள்ளது. இதனால், அடுத்த 5 ஆண்டுகளில் 10 நாடுகளில் த்ரிஷ்யம் படங்களை ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே, கொரியன் மொழியில் த்ரிஷ்யம் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது