Bangladesh Fire (Photo Credit: @PTI_News X)

மார்ச் 1, டாக்கா (Dhaka): வங்கதேச (Bangladesh) தலைநகர் டாக்காவில் 6 தளங்கள் கொண்ட வணிக வளாகம் ஒன்றில் நேற்று இரவு தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் 45 பேர் பலியாகியுள்ளனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். இந்த தீ விபத்தில் காயமடைந்தோர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. மேலும் இந்த தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். The World’s First 3D Tablet: உலகின் முதல் 3D டேப்லெட்.. அதில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளது தெரியுமா?.!

இந்த விபத்து குறித்து அந்நாட்டு சுகாதார அமைச்சர் டாக்டர் சமந்தா லால் சென் (Samanta Lal Sen) கூறியதாவது, “இந்த விபத்திற்கு 13 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. கடுமையான போராட்டங்களுக்கு மத்தியில் தீயணைப்பு வீரர்கள் 75 பேரை வெளியேற்றினர், இவர்கள் 42 பேர் மயங்கிய நிலையில் இருந்தனர். மேலும் காயமடைந்தவர்களுக்கு தீவிர சுவாசக் கோளாறும் ஏற்பட்டுள்ளது.” என்றார்.