Deadpool & Wolverine Trailer: டெட்பூல் அண்ட் வோல்வரின் ட்ரெய்லர் ரிலீஸ்.. கம்பேக் கொடுக்குமா மார்வல்..!

மார்வெல் நிறுவனத்தின் டெட்பூல் அண்ட் வோல்வரின் படத்தின் புதிய ட்ரெய்லர் ரிலீசாகியுள்ளது.

Deadpool & Wolverine Trailer (Photo Credit: YouTube)

ஏப்ரல் 23, கலிபோர்னியா (Cinema News): டிஸ்னிக்கு சொந்தமானது மார்வெல் ஸ்டூடியோஸ் ஆகும். மார்வெல் ஸ்டூடியோஸின் சினிமாட்டிக் யுனிவெர்ஸுக்கு உலக அளவில் ரசிகர்கள் உள்ளனர். கேப்டன் அமெரிக்கா, அயர்ன் மேன், ஸ்பைடர் மேன், தோர் போன்ற மார்வெல் ஸ்டூடியோஸின் கதாபாத்திரங்கள் ஆக்‌ஷன் அட்வென்ச்சரில் எப்போதும் குறை வைத்தது இல்லை. ஆனால் கடந்த சில வருடங்களாகவே மொக்கையான படங்களின் மட்டுமே மார்வல் கொடுத்து வருகிறது. இதனால் மார்வல் எப்போது கம்பேக் கொடுக்கும் என்று அனைவரும் காத்திருந்தனர்.

டெட்பூல் அண்ட் வோல்வரின் ட்ரெய்லர்: இந்நிலையில் மார்வெல் ஸ்டுடியோவில் இருந்து அடுத்ததாக டெட்பூல் அண்ட் வோல்வரின் (Deadpool & Wolverine) படம் வெளியாக உள்ளது. ஷான் லெவி இயக்கும் இப்படத்தில் ரியான் ரெனால்ட்ஸ் மற்றும் ஹக் ஜேக்மேன் (Ryan Reynolds And Hugh Jackman) ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை மார்வெல் ஸ்டுடியோஸ் மற்றும் 21 லேப்ஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்திருக்கிறது. இப்படம் ஜூலை 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தற்போது இந்த படத்தின் ட்ரெய்லரை மார்வெல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. Chennai Caste Killing: காதலனைக் கொடூரமாக கொண்ட மிருகங்கள்.. சோகத்தில் தன் உயிரை மாய்த்துக் கொண்ட காதலி..!

இந்த ட்ரெய்லரில் டெட்பூல் கதாபாத்திரத்துக்கே உரிய நக்கலான வசனங்கள், இரட்டை அர்த்த ஜோக்குகள் இதிலும் காணப்படுகின்றன. மேலும் யுனிவர்ஸில் வெறுக்கப்படும் நபராக மாறிப் போயிருக்கிறார் வோல்வரின். அவரிடம் உதவிகேட்டுகிறார் டெட்பூல். இதில் இருவருக்கும் சண்டை நடக்கிறது. அதுமட்டுமின்றி மல்டிவெர்ஸ் மூலம் டீசரின் இறுதியில் வோல்வரினின் உருவம் நமக்கு நிழலாக காட்டப்படுகிறது. இதனால் இந்தப் படத்தின் மீது இப்போதே ரசிகர்களுக்கு உச்சக்கட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement