GoM Meeting on GST Reforms (Photo Credit: @FinMinIndia X)

ஆகஸ்ட் 20, டெல்லி (Delhi News): மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) தலைமையில், டெல்லியில் இன்று மற்றும் நாளை (ஆகஸ்ட் 21), ஜிஎஸ்டி விகிதங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் குறித்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், மத்திய நிதித்துறை இணையமைச்சர், கோவா முதல்வர், பீகார் துணை முதல்வர் மற்றும் மாநில நிதி அமைச்சர்களும் (GoM) கலந்துகொண்டனர். ஜிஎஸ்டி வரி முறையை எளிதாக்கும் வகையில், மத்திய அரசின் புதிய திட்டங்கள் முன்வைக்கப்படவுள்ளன. குறிப்பாக, அத்தியாவசியப் பொருட்களுக்கு 5%, பிற பொருட்களுக்கு 18% என இரண்டு அடுக்கு ஜிஎஸ்டி வரி விகிதங்களை அறிமுகப்படுத்துவது குறித்து விவாதிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் பரிந்துரைகள், வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் முழு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு, இறுதி முடிவுக்காக அனுப்பப்படும். அத்தை விஷம் குடித்து தற்கொலை.. வாலிபர் விவரீத முடிவு..!

ஆயுள் மற்றும் சுகாதார காப்பீட்டு திட்டம்:

இதில், புகையிலை போன்ற பொருட்களுக்கு 40% சிறப்பு வரி விதிப்பது மற்றும் இழப்பீட்டு செஸ் வரியை நீக்குவது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. மேலும், ஆயுள் மற்றும் சுகாதார காப்பீட்டு பிரீமியங்கள் மீதான ஜிஎஸ்டி (GST) வரியை நீக்குவதற்கான மத்திய அரசின் திட்டமும் விவாதிக்கப்படுகிறது. தற்போது, 18% உள்ள வரியை நீக்கினால், காப்பீட்டுத் திட்டங்கள் பொதுமக்களுக்கு, மலிவாகக் கிடைக்கும். இதன்மூலம், இந்தியாவில் மக்களுக்கான காப்பீட்டுத் திட்டங்களின் பயன்பாட்டை மேலும் அதிகரிக்க முடியும் என நம்பப்படுகிறது.

காப்பீட்டுத் திட்டங்களில் ஜிஎஸ்டி மாற்றம்:

பீகார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி, முதல் நாள் கூட்டத்திற்குப் பிறகு பேசுகையில், காப்பீட்டு திட்டங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை பெரும்பாலான மாநிலங்கள் நீக்க ஒப்புக்கொண்டாலும், சில மாநிலங்கள் மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்துள்ளன. இத்திட்டம் ஜிஎஸ்டி கவுன்சிலின் இறுதி முடிவுக்கு கொண்டு செல்லும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், ராஜஸ்தான் மாநில அமைச்சர் கஜேந்திர சிங் தெரிவிக்கையில், ஜிஎஸ்டி வரி விகிதங்களைக் குறைப்பது பொதுமக்களுக்கும் நிறுவனங்களுக்கும் நிதிச் சேமிப்பை ஏற்படுத்தும். இந்த சேமிக்கப்பட்ட பணம் முதலீடுகளாக மாறி தனி மனிதனின் பொருளாதார வளர்ச்சிக்கு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும் என்றும் தெரிவித்தார். மேலும், இதுகுறித்து நாளை (ஆகஸ்ட் 21) விரிவாக விவாதிக்கப்படும் என்று அவர் கூறினார். இவையனைத்தும், ஜிஎஸ்டி நடைமுறைகளை எளிமையாக்கி, வரி விதிப்பு முறையை வெளிப்படையாகவும், ஒட்டுமொத்த வாழ்க்கை மற்றும் வணிகம் செய்வதை எளிதாக்குவதையே நோக்கமாகக் கொண்டுள்ளன.