ஏப்ரல் 23, சென்னை (Chennai): சென்னை பள்ளிக்கரணை அருகே உள்ள ஜல்லடியன்பேட்டையைச் சேர்ந்தவர் ஷர்மிளா. பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இவர், பள்ளிக்கரணை அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த பிரவீன் (26) என்ற இளைஞரை காதலித்து சுயமரியாதை திருமணம் செய்தனர். இதனைத் தொடர்ந்து, பெண் வீட்டார் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணையின்போது, ஷர்மிளா பிரவீனுடன் செல்வதாகக் கூறியதையடுத்து, இருதரப்பினரிடமும் ஒப்புதல் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பினர்.
ஆணவக்கொலை: திருமணம் நடந்து நான்கு மாதங்கள் ஆன நிலையில், பிரவீனும் ஷர்மிளாவும் பள்ளிக்கரணையில் உள்ள அம்பேத்கர் தெருவில் ஒன்றாக வாழ்ந்தனர். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி பிரவீனை 5 பேர் கொண்ட கும்பல் வெட்டிச் சாய்த்தது. இதில் ஷர்மியின் அண்ணன் தினேஷ், அவரது நண்பர்கள் விஷ்ணுராஜ், ஸ்ரீராம், ஜோதிலிங்கம் , ஸ்ரீஃபன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் கொலைக்கு காரணமாக இருந்த ஷர்மிளாவின் பெற்றோர் துரைக்குமார்- சரளா, குடும்ப உறுப்பினர் நரேஷ் ஆகிய மூவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. TN Weather Report: தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!
ஷர்மிளா தற்கொலை: அவர்கள் மீது புகார் கொடுத்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததால் மனமுடைந்த ஷர்மி மார்ச் 14 ஆம் தேதி தனது வீட்டில் தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவரை மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த நிலையில் தற்கொலைக்கு முயன்ற போது கழுத்து எலும்பு உடைந்து நரம்புகள் பாதித்ததால் ஷர்மி கோமா நிலைக்கு சென்றார். இதையடுத்து அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி ஷர்மி உயிரிழந்தார். மேலும் அவர் தற்கொலைக்கு முன் எழுதிய கடிதத்தை காவல்துறையினர் கண்டெடுத்தனர். அதில் எனது கணவர் சென்ற இடத்திற்கே நானும் செல்கிறேன். என் சாவுக்கு காரணம் துரைகுமார், சரளா, நரேஷ் உள்ளிட்டோர்தான் என குறிப்பிட்டிருந்தார்.