Leo Trailer Release: அனல் பறக்கும் “லியோ” பட ட்ரெய்லர்: டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் அலறவிடும் லுக்.!

அக்டோபர் 19ஆம் தேதி, லியோ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் நேற்று படத்தின் ட்ரெய்லர் வெளியாகி, 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இருக்கிறது. டான்ஸ் மாஸ்டர் சாண்டி ட்ரெய்லரில் மாஸ் தோற்றத்தில் வந்து ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்.

Sandy Master (Photo Credit: Twitter)

அக்டோபர் 06, சென்னை (Cinema News): மாநகரம், கைதி மற்றும் விக்ரம் படங்களை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாக இருக்கும் “லியோ” படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரசிகர்களின் காத்திருப்புக்கு விருந்து தரும் விதமாக லியோ படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது.

முன்னதாக ரசிகர்கள், “லியோ” படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் அதிகப்படியான வரவேற்பு காரணத்தாலேயே, அந்த நிகழ்ச்சியை லியோ பட குழுவினர் ரத்து செய்து விட்டனர். Noyyal River Kovai:கோவை நொய்யல் ஆற்றை பராமரிக்க புதிய திட்டம்.!: நடந்தாய் வாழி காவிரி.!

நடன இயக்குனரும், நடிகருமான சாண்டி, இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ரத்தானதை சரி செய்யும் வகையில், சாண்டி தனது சமூக வலைத்தள பக்கத்தில், அவர் சிக்ஸ் பேக் தோற்றத்துடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்தார்.

அதைத்தொடர்ந்து நேற்று வெளியான படத்தின் ட்ரெய்லரில், சாண்டி அட்டகாசமான லுக்குடன் மாஸ் காட்டியிருக்கிறார். அவரது முக பாவனையையும், கெட்டப்பையும் பார்க்கும்போது, அவர் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பதை யூகிக்க முடிகிறது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement