Blue Sattai Maran Coolie Review (Photo Credit : Youtube / @dt_next X)

ஆகஸ்ட் 15, சென்னை (Chennai News): கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என அடுத்தடுத்து வெற்றி படங்களை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். இவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து இயக்கிய கூலி படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வந்தது. பான் இந்தியா படமாக உருவாகிய இந்த கூலி படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்கியது. அனிருத் மியூசிக்கில் நடிகர்கள் ரஜினிகாந்த், சத்யராஜ், சுருதிஹாசன், அமீர் கான், நாகார்ஜுனா என பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். Coolie Review: கூலி படம் எப்படி இருக்கு?.. லோகேஷ் - ரஜினி கூட்டணி ஜெயித்ததா?.. மக்களின் விமர்சனம் என்ன?.! 

கூலி படம் எப்படி இருக்கு?

இந்நிலையில் படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி நேற்று உலகளவில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. இதனிடையே ரசிகர்களை தவிர்த்து படம் பார்க்க வந்த பலரும் கலவையான விமர்சனங்களை முன்வைத்திருந்தனர். தமிழகத்தை தாண்டி பிற மாநிலங்களிலும் இதே மாதிரியான விமர்சனங்கள் வைக்கப்பட்டதால் படக்குழு அதிர்ச்சி அடைந்தது. இந்நிலையில் தமிழ் திரைப்பட விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் படம் பார்த்துவிட்டு தனது ரிவ்யூ (Blue Sattai Maran Coolie Review) வீடியோவை பதிவிட்டுள்ளார்.

ப்ளூ சட்டை மாறன் ரிவ்யூ :

இந்த வீடியோ தற்போது வைரலாக வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான படத்தில் இது தனித்துவமானது என அவர் குறிப்பிட்டாலும், அந்த படம் ஏற்றுக்கொள்ளப்படும் வகையில் இல்லை. பான் இந்தியா திரைப்படமாக நடிகர்களை சரிவர கையாண்டு இருக்க வேண்டும். அதற்கான கதைக்களமும் அமையவில்லை. படம் சொதப்பலாக இருக்கிறது என கூறியுள்ளார். இந்த விஷயத்துக்கு ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் :