71st National Film Awards (Photo Credit : Youtube)

செப்டம்பர் 23, சென்னை (Chennai News): இந்திய திரைத்துறையில் சிறந்த நடிகர், படைப்புகள், திரைக்கலைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு மத்திய அரசின் சார்பில் கடந்த 1954-ம் ஆண்டு முதல் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2023ஆம் ஆண்டுக்கான 71வது தேசிய திரைப்பட விருதுகள் ஆகஸ்ட் 01 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. 2023ஆம் ஆண்டில் மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தால் சான்றளிக்கப்பட்ட திரைப்படங்கள், இந்த விருதுகளுக்கு தகுதியானவையாக கருதப்படும்.

உயரிய விருதை பெற்றார் நடிகர் மோகன்லால் :

71வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று மாலை 4 மணி அளவில் தொடங்கி தலைநகர் டெல்லியில் நடைபெற்று வரும் நிலையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு (President Droupadi Murmu) விருதுகளை வழங்கி வருகிறார். மலையாள நடிகர் மோகன்லாலுக்கு திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கி விருது (Dadasaheb Phalke Award) வழங்கப்பட்டது. சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதை நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் ஹரிஷ் கல்யாண் இணைந்து நடித்த பார்க்கிங் திரைப்படம் (Best Tamil Film 2023) வென்றது. இப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் எழுதி இயக்கி இருந்தார்.

சிறந்த திரைப்படத்துக்கான விருதை பெற்ற பார்க்கிங் :

மேலும் பார்க்கிங் திரைப்படத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதை (Best Supporting Actor Award) எம்.எஸ். பாஸ்கர் வென்றார். அதுபோல சிறந்த திரைக்கதை ஆசிரியர் விருதை (Best Screenplay Award) ராம்குமார் பாலகிருஷ்ணன் வென்றுள்ளார். கடந்த ஆகஸ்ட் 01ஆம் தேதி அறிவிக்கப்பட்ட இந்த திரைப்பட விருதை இன்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்கி கௌரவித்தார். அதன்படி படத்தின் தயாரிப்பாளர் தினேஷ் மற்றும் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் விருதுகளை பெற்றுக்கொண்டனர்.

சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை பெற்றார் ஜி.வி பிரகாஷ் :

சிறந்த இசையமைப்பாளருக்கான (Best Music Director Award) விருதை ஜி.வி. பிரகாஷ் பெற்றார். சூரரைப் போற்று திரைப்படத்திற்கு பின் இரண்டாவது முறையாக ஜி.வி. பிரகாஷ் தேசிய விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜவான் படத்தில் நடித்த நடிகர் ஷாருக்கானுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது (Best Actor Award) வழங்கப்பட்டது.

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு 71வது தேசிய திரைப்பட விருதுகள் (71st National Film Awards Live) வழங்கும் நேரலை காட்சிகள் :