செப்டம்பர் 21, சென்னை (Cinema News): ரிஷப் ஷெட்டி இயக்கம் மற்றும் நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான திரைப்படம் காந்தாரா. இப்படத்தின் வெளியீட்டுக்குப் பின் பல மொழிகளிலும் வரவேற்பு பெற்று பிராந்திய மொழிகளில் மாற்றப்பட்டு வெளியீடு செய்யப்பட்டது. ரூ.25 கோடிக்குள் தயாரிக்கப்பட்ட இந்த படம் சுமார் 500 கோடியை கடந்து வசூல் செய்து மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. காந்தாரா பாகத்தின் வெற்றியை தொடர்ந்து காந்தாரா படத்தின் இரண்டாவது பாகமாக காந்தாரா சாப்டர் 1 உருவாக்கப்பட்டு வந்தது.
விரைவில் வெளியாகும் காந்தாரா சாப்டர் 1 :
இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் நிலையில், படம் வரும் அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்கான தமிழ்நாடு திரையரங்கு வெளியீடு உரிமை ரூ.33 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனிடையே படத்தை இந்திய அளவில் மட்டுமல்லாது பிற நாடுகளிலும் திரையிட ஏற்பாடு செய்துள்ள படக்குழு அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியாz ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் என 30 நாடுகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. Bigg Boss Tamil Season 9: பிக் பாஸ் 9 எப்போது?.. தேதி குறிச்சு வச்சிக்கோங்க.. அசத்தல் அப்டேட் கொடுத்த விஜய் டிவி.!
காந்தாரா 2 டிரெய்லர் வெளியீடு :
இதனிடையே காந்தாரா சாப்டர் 1 படத்தின் டிரெய்லரை (Kantara Chapter 1 Trailer) இன்று நடிகர் சிவகார்த்திகேயன் தமிழில் வெளியிடுவார் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி காந்தாரா சாப்டர் 1 படத்தின் டிரெய்லர் காட்சிகள் மதியம் 1 மணியளவில் வெளியிடப்பட்டது. இந்த டிரெய்லரில் ஈஸ்வரன் தர்மத்தை நிலைநாட்ட பூமிக்கு கணங்களை அனுப்புவார் என்பது போலவும், காந்தாரா தெய்வம் மக்களை காப்பாற்றுவது போலவும் இரத்தம் தெறிக்கும் காட்சிகள் இடம்பெற்று மக்களின் எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது.