Khelo India Youth Games 2023: தமிழகத்திற்கே பெருமை... கேலோ இந்தியா போட்டிகளை நேரலையில் பார்ப்பது எப்படி?.. முழு விபரம் இதோ.!
13 நாட்கள் தமிழகத்தில் பிரமாண்டமாக நடைபெறவுள்ள கேலோ இந்தியா போட்டிகளை நேரலையில் பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதுகுறித்த பிரத்தியேக தகவலை உங்களுக்காக லேட்டஸ்ட்லி தமிழ் வழங்குகிறது.
ஜனவரி 19, சென்னை (Chennai): இந்தியா எங்கும் இருக்கும் இளைஞர்களின் விளையாட்டுத் திறனை கண்டறிந்து, அவர்களை அங்கீகரித்து உலகளவில் அடையாளப்படுத்தும் பொருட்டு, கடந்த 2018ம் ஆண்டு முதல் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு (Khelo India Youth Games) போட்டிகள் நடைபெறுகின்றன. அதன்படி, ஜனவரி 19, 2024 முதல் ஜன. 31ஆம் தேதி வரை தமிழ்நாட்டில், ஆறாவது கேலோ இந்தியா 2023 போட்டிகள் நடக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. Steve Helps to Shamar: மேற்கிந்திய தீவுகள் அணி வீரருக்கு உதவிய ஸ்டீவ் ஸ்மித்; அவிழ்ந்த காலணி கயிறுகளை சீராக்கி நெகிழ்ச்சி செயல்.!
தென்னிந்தியாவில் முதல் முறை: தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய நான்கு நகரங்களில், பல்வேறு பிரிவுகளில் இந்த போட்டிகள் நடத்தப்படுகின்றன. பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜன.19) மாலை 06:30 மணியளவில் போட்டியை தொடங்கி வைக்கிறார். தென்னிந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாட்டில் (Khelo India Sports in Tamilnadu) கேலோ இந்தியா போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த போட்டிகளில் கலந்துகொள்ள இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் & யூனியன் பிரதேசங்களை சேர்ந்த பல வீரர்-வீராங்கனைகள் என 5,500 பேர் தமிழகம் வந்துள்ளனர். தென்னிந்தியாவில் முதல் முறையாக கேலோ இந்தியா போட்டிகள் ஒரே மாநிலத்தில் விறுவிறுப்புடன் நடைபெறவுள்ளது. Khelo India Youth Games 2023: தமிழ்நாட்டில் முதல் முறை.. இன்று தொடங்குகிறது கேலோ இந்தியா விளையாட்டு.. விபரம் இதோ.!
கேலோ போட்டியை (Khelo India Live) நேரலையில் பார்ப்பது எப்படி? இப்போட்டிகளை டிடி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி வாயிலாக நேரலையில் பார்க்கலாம். இதற்கான பிரத்தியேக ஏற்பாடுகளை டிடி (DD Sports) தொலைகாட்சியின் விளையாட்டு பிரிவு மேற்கொண்டுள்ளது. அதேபோல, யூடியூப் பக்கத்தில் பிரசார் பாரதி ஸ்போர்ட்ஸ் (Prasar Bharati Sports) யூடியூப் சேனலிலும் நேரலையில் பார்க்கலாம். இதற்கு பணம் ஏதும் செலுத்த தேவையில்லை. இவசமாகவே போட்டிகளை தொலைக்காட்சி மற்றும் யூடியூப் வழியே காண இயலும்.
இன்றைய தொடக்க விழாவை நேரலையில் காணுவதற்கு:
(The above story first appeared on LatestLY on Jan 19, 2024 02:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

