Smith Helps Joseph (Photo Credit: @cricketcomau X)

ஜனவரி 19, அடிலெய்டு (Adelaide): ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி (West Indies), கடந்த 17ஆம் தேதி முதல் தனது முதல் டெஸ்ட் தொடரை விளையாடியது. இந்த டெஸ்ட் தொடரில் முதல் இன்னிங்ஸில் மேற்கிந்திய தீவுகள் அணி 10 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. அதனைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 283 ரன்கள் குவித்தது.

ஆஸி., அணி வெற்றி: மறுமுனையில், இரண்டாவது இன்னிங்ஸில் (Aus Vs WI Test Series) களமிறங்கிய மேற்கிந்திய தீவுகளின் அணி 10 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்தது. இதனால் தொடக்கத்தில் இருந்து முன்னிலையில் இருந்த ஆஸ்திரேலியா, 26 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி, விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. Ocean Lifespaces India Raid: காலையிலேயே அதிரடி காட்டிய அமலாக்கத்துறை: சென்னையில் கட்டுமான தொழிலதிபர் வீடு & அலுவலகத்தில் திடீர் சோதனை.! 

காலணிகளை சரிசெய்ய உதவிய ஸ்மித்: இதனால் இரண்டு டெஸ்ட் தொடர்களில், ஆஸ்திரேலியா ஒரு போட்டியில் வெற்றி பெற்று முன்னிலையில் இருக்கிறது. நேற்றைய ஆட்டம் அங்குள்ள அடிலெய்டு ஓவல் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இந்த போட்டியின் போது, களத்தில் இருந்த மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் சமர் ஜோசப் (Shamar Joseph) காலணியின் கயிறுகள் அவிழ்ந்தன. இதனையடுத்து, அவர் காலணியை சரி செய்ய ஸ்டீவ் ஸ்மித்திடம் உதவி கேட்கவே, உடனடியாக அவர் எவ்வித தயக்கமும் இன்றி அதனை சரி செய்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பாராட்டுகளை குவித்து வருகிறது.

அடுத்த போட்டி & நேரலை விபரம்: விளையாட்டு மைதானங்களில் இவ்வாறான நிகழ்வுகள் மிகவும் சாதாரணமானவை எனினும், பெரிய அளவிலான போட்டியாளர்கள் அனைத்து வீரர்களுக்கும் இறங்கி உதவுவது கிடையாது. அடுத்த டெஸ்ட் தொடர் ஜனவரி 25 முதல் 29 வரை நடைபெறுகிறது. ஒருநாள் போட்டிகள் பிப்ரவரி 2 முதல் தொடங்கி நடைபெறுகிறது. இந்த போட்டிகளை ஹாட்ஸ்டார் (Hotstar) செயலியில் நாம் நேரலையில் பார்க்கலாம்.

வீடியோவை காணுங்கள்: