ஜனவரி 19, சென்னை (Chennai): இந்தியா எங்கும் இருக்கும் இளைஞர்களின் விளையாட்டுத் திறனை கண்டறிந்து, அவர்களை அங்கீகரித்து உலகளவில் அடையாளப்படுத்தும் பொருட்டு, கடந்த 2018ம் ஆண்டு முதல் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு (Khelo India Youth Games) போட்டிகள் நடைபெறுகின்றன. அதன்படி, ஜனவரி 19, 2024 முதல் ஜன. 31ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் கேலோ இந்தியா 2023 போட்டிகள் நடக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய நான்கு நகரங்களில், பல்வேறு பிரிவுகளில் இந்த போட்டிகள் நடத்தப்படுகின்றன. பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை போட்டியை தொடங்கி வைக்கிறார். தென்னிந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாட்டில் (Khelo India Sports in Tamilnadu) கேலோ இந்தியா போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த போட்டிகளில் கலந்துகொள்ள இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் & யூனியன் பிரதேசங்களை சேர்ந்த பல வீரர்-வீராங்கனைகள் என 5,500 பேர் போட்டிக்காக தமிழகம் வந்துள்ளனர். போட்டியில் ஸ்குவாஸ் கேலோ விளையாட்டும், 1000 கலைஞர்களின் தற்காப்பு கலையான சிலம்பம் நிகழ்ச்சிகளும் சிறப்பு விஷயங்களாக இடம்பெறுகின்றன. முன்னதாக ஹரியானா மற்றும் மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் கேலோ இந்தியா போட்டிகள் நடைபெறும் போது, உட்கட்டமைப்பு பிரச்சனை காரணமாக சில போட்டிகள் வெளியில் மாநிலங்களில் நடத்தப்பட்டது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் அனைத்து போட்டிகளும் ஒரே அம்சமாக நான்கு முக்கிய நகரங்களில் நடைபெறுகின்றன. Steve Helps to Shamar: மேற்கிந்திய தீவுகள் அணி வீரருக்கு உதவிய ஸ்டீவ் ஸ்மித்; அவிழ்ந்த காலணி கயிறுகளை சீராக்கி நெகிழ்ச்சி செயல்.!
Khelo India Youth Games 2023: A Look at Five Things Unique to Sixth Edition of KIYG in Tamil Nadu@kheloindia | #KheloIndia | #KheloIndiaYouthGames | #KIYG2023 https://t.co/7CtQiEu3Le
— LatestLY (@latestly) January 18, 2024
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)