
ஜூன் 21, சென்னை (Cinema News): தமிழ் தொலைக்காட்சிகளில் விஜய் தொலைக்காட்சி (Vijay Television) எப்போதுமே தனது ரியாலிட்டி ஷோ மூலமாக தன்னை தனித்துவமாக அடையாளப்படுத்திக் கொள்ளும். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் (Super Singer Karuppasamy Video) நிகழ்ச்சிக்கென தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது.
பக்தி பாடல் சுற்று :
சூப்பர் சிங்கர் ஜூனியர், சூப்பர் சிங்கர் சீனியர் என இதில் இரு வகைகளும் இருக்கின்றன. தற்போது நடைபெற்று வரும் சூப்பர் சிங்கர் (Super Singer) நிகழ்ச்சியில் பக்தி பாடல்களுக்கு தனி காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தது. அச்சமயம் அபிராமி என்ற போட்டியாளர் கருப்புசாமியின் (Karuppasamy Song Super Singer Video) அங்கே இடி முழங்குது பாடலை பாடி பலத்த வரவேற்பை பெற்றிருந்தார். YouTuber Vishnu Arrested: மனைவியின் பரபரப்பு புகார்.. பிரபல தமிழ் யூடியூபர் கைது..!
கருப்புசாமி வந்து ஆடிய புஷ்பவனம் குப்புசாமி (Pushpavanam Kuppusaamy Karuppasamy Dance Video):
அங்கிருந்த அனைவரும் இதற்கு கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் நாட்டுப்புற பாடல்கர்களான செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி (Singer Senthil Ganesh Rajalatsumi) தம்பதியும், பாடகர் வேல்முருகனும் இதில் கலந்து கொண்டிருந்தனர். இதனிடையே அபிராமி பாடலை முடித்ததும் மேடைக்கு வந்த புஷ்பவனம் குப்புசாமி திடீரென கருப்புசாமி வந்து ஆடினார்.
ஆக்ரோஷமாக கத்திய வீடியோ வைரல் :
அவரிடம் அங்கிருந்தவர்கள் காலில் விழுந்து ஆசி வாங்கிய நிலையில், நெற்றியில் விபூதி இடும் போது ஆக்ரோஷமாக கத்தினார். இந்த விஷயம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி நெட்டிசன்களின் விமர்சனத்தை பெற்று வருகிறது. Actor Arya: நடிகர் ஆர்யாவின் வீடு, ஹோட்டலில் நடந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு.!
நெட்டிசன்கள் சரமாரி கேள்வி :
மேலும் உங்களின் பிரமோஷனுக்கு கடைசியில் கருப்பசாமி தான் கிடைத்தாரா?, எதற்காக இவ்வாறான மூடநம்பிக்கை விஷயத்தை எல்லாம் பரப்புகிறீர்கள்?, குழந்தைகள் அதிகம் பார்க்கும் இந்த நிகழ்ச்சியில் எதற்காக இப்படியான மூடநம்பிக்கை குறித்த தகவல்களை அப்பட்டமாக பரப்ப வேண்டும்? என கண்டனத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதிலும் ஒரு பயனர் கருப்பசாமி வருவதெல்லாம் மூடநம்பிக்கையில் இரண்டாவதாக வைத்துக் கொண்டாலும், கருப்பசாமி இறங்கிய ஆளை ஒருவரால் பிடித்து நிறுத்த முடியுமா? உங்களின் ட்ராமாவுக்கு அளவில்லையா? எதற்காக இந்த செயல்கள்? என கூறியுள்ளார்.
டிவி செட்டுக்குள் கருப்பசாமி:
என்னடா இது கருப்பசாமி டிவி செட்டுக்குள்ள எல்லாம் வர்றாரு உங்க மூட நம்பிக்கைக்கு ஒரு அளவில்லையா ?? pic.twitter.com/pbmyBzabbK
— கபிலன் (@_kabilans) June 20, 2025