ஜூன் 20, மதுரவாயல் (Chennai News): நிட்டா ஆர்கானிக்ஸ் (Nittah Organics) நிறுவனத்தின் உரிமையாளராகவும், புதிதாக தோற்றுவிக்கப்பட்ட கட்சி ஒன்றின் ஆதரவாளராகவும் சமூக வலைதளத்தில் தன்னை பிரபல யூடியூபராகவும் நிலை நிறுத்திக் கொண்டவர் விஷ்ணுகுமார் (YouTuber Vishnu TVK). தனது தலைவருக்கு எதிராக பேசுவோரை கடுமையாக விமர்சித்து இவர் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி பார்ட்டிக்கு செல்லும் போது அறிமுகமான நண்பரின் தங்கை ஒருவரின் வீட்டிற்கு சென்றார்.
குடும்பத்தினரிடம் வசமாக சிக்கிய யூடியூபர்:
அங்கு கையில் சர்ச்சைக்குரிய ஒரு பொருளுடன் குடும்பத்தினரிடம் சிக்கிக்கொண்ட நிலையில், அவரை குடும்பத்தினர் அனைவரும் வெளுத்து வாங்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி மிகப்பெரிய அளவில் கவனத்தைப் பெற்றது. இது குறித்து அதிகாரப்பூர்வ புகார் ஏதும் கிடைக்காததால் காவல்துறையினரும் வீடியோ குறித்து மட்டும் விசாரணை நடத்திவிட்டு அதனை கிடப்பில் போட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் விஷ்ணுவின் மனைவி அஸ்மிதா மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். Lava Storm Lite 5G: அறிமுகமானது லாவா புதிய பட்ஜெட் ஸ்மார்ட் போன்.. விலை, சிறப்பம்சம் இதோ.!
மனைவிக்கு வேறொருவருடன் தொடர்பு இருப்பதாக பேச்சு :
இந்த புகாரின் பேரில் விஷ்ணு கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது சமீபத்தில் விஷ்ணுகுமார் ஒப்பனை கலைஞரான தனது மனைவி அஸ்மிதாவிற்கும், ஏடிஜிபி பொறுப்பில் இருக்கும் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக பேசியிருந்தார். இந்த விஷயம் மிகப்பெரிய அளவில் சர்ச்சையை சந்தித்தது. ஏடிஜிபி, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் குடியிருக்கும் பகுதியில் தற்போது குடும்பத்துடன் வசித்து வரும் அஸ்மிதா மீது கணவர் இவ்வாறான விஷயத்தை தெரிவித்தது கடும் அதிர்வலை ஏற்படுத்தியது.
மனைவி போலீசில் அளித்த புகார் :
இதனை அடுத்து அஸ்மிதா கொடுத்த புகாரின் பேரில் மதுரவாயில் காவல்துறையினர் நம்பிக்கை மோசடி, தாக்குதல் நடத்துதல் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விஷ்ணுகுமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவரிடம் தொடர்பு விசாரணை நடந்து வருகிறது.