Jawan 1000 Crore: இமாலய சாதனை படைத்த ஷாருக்கானின் ஜவான் திரைப்படம்; அட்லீயின் மாபெரும் விஸ்வரூபம்.. கொண்டாட்டத்தின் உச்சத்தில் ரசிகர்கள்.!
ஷாருக்கான்-அட்லீ கூட்டணியில் உருவாகிய திரைப்படம், கடந்த செப். 07ம் தேதியன்று வெளியானது. இன்று அப்படம் ஒரே மாதத்திற்குள் ரூ.100 கோடியை கடந்து வசூல் சாதனை செய்துள்ளது.
செப்டம்பர் 25, மும்பை (Cinema News): அட்லீ இயக்கத்தில், ரெட் சில்லிஸ் என்டர்டைன்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், அனிரூத் இசையில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஜவான் (Jawan).
இப்படத்தில் ஷாருக்கான் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். அனிருத்தின் இசை திரையரங்கை அதிரவைத்தது. அட்லீ முதன் முதலாக இயக்கிய ஹிந்தி திரைப்படம் ஷாருக்கானின் திரையுலக வாழ்க்கையிலும் மிகப்பெரிய மைல்கல்லாக அமைந்துவிட்டது. 2 people killed in Russian Airstrikes: உக்ரைனில் தொடரும் ரஷ்ய ராணுவத்தின் தாக்குதல்: 2 பேர் பலி..! சோகத்தில் மக்கள்..!
ரூ.300 கோடி பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படம், தற்போது வரை சர்வதேச அளவில் ரூ.1000 கோடியை கடந்து வசூல் சாதனை செய்துள்ளது. இந்த சாதனை ஷாருக்கான் - அட்லீ தரப்பில் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. Delhi Metro Couple Kissing Video: உதட்டோடு உதடு வைத்து.. பொதுமக்கள் முன் அத்துமீறிய காதல் ஜோடி.. டெல்லி மெட்ரோவில் பகீர்.!
ஷாருக்கானின் பதான் திரைப்படமும் சர்வதேச அளவில் கவனிக்கத்தக்க வசூலை செய்த நிலையில், அதனைதொடர்ந்த ஜவான் திரைப்படம் 1000 கோடிகளை வசூல் செய்து இருப்பது பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு, பிரியாமணி, தீபிகா படுகோன், சன்யா மல்கோத்ரா, ரிதி தோக்ரா, சுனில் குரோவர், சஞ்சய் தத், பாக்ஸர் தீனா, ரியாஸ் கான் உட்பட பலரும் நடித்திருந்தனர். அதிரடி ஆக்சன் காட்சிகளுடன் வெளியான ஜவான், மக்களின் மனதை வென்றுவிட்டதை வசூலே உறுதி செய்கிறது.
History in the maKING ft. Jawan! 🔥
Have you watched it yet? Go book your tickets now! https://t.co/B5xelU9JSg
Watch #Jawan in cinemas - in Hindi, Tamil & Telugu. pic.twitter.com/rhJSF0vdsw
— Red Chillies Entertainment (@RedChilliesEnt) September 25, 2023
(The above story first appeared on LatestLY on Sep 25, 2023 04:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

