செப்டம்பர் 25, கீவ் (World News): சர்வதேச அளவில் பொருளாதார சேதங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ரஷ்யா- உக்ரைன் போர் (Russia-Ukraine War) இருபது மாதங்களாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இரு தரப்பினரும் மாறி மாறி தாக்குதலை நிகழ்த்துவதால் ராணுவ வீரர்கள் உட்பட அப்பாவி மக்களும் உயிரிழந்து வருகின்றனர்.
ரஷ்யாவின் ராணுவ படையினர் நேற்று உக்ரைனின் கெர்சன் (Kherson) மாகாணத்தில் இருக்கும் பெரிஸ்லாவ் (Beryslav) கிராமத்தில் வீடுகளின் மேல் வான்வெளி தாக்குதலை (Airstrikes) நிகழ்த்தினார். இந்த தாக்குதலில் ஒரு பெண் பலியாகி இருக்கிறார் மேலும் ஒரு காவலர் உட்பட மூன்று பேர் படுகாயம் அடைந்திருக்கின்றனர். Hyderabad Shocker: விநாயகர் கையில் இருந்த லட்டுவை திருட முயற்சி: 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது: ஹைதராபாத்தில் பரபரப்பு சம்பவம்.!
அதைத்தொடர்ந்து வோவ் (Lvove) கிராம பகுதியில் ரஷ்யா படையினர் மேற்கொண்ட வான்வெளி தாக்குதலில் 67 வயதான முதியவர் ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும் அந்த மாகாணத்தின் கவர்னர் அலெக்சாண்டர் ப்ரோகுடின் (Oleksandr Prokudin) தெரிவித்திருக்கிறார்.
அதே சமயத்தில் உக்கரைன் ராணுவ படையினர் குர்ஸ்க் (Kursk) நகரில் இருக்கும் ரஷ்யாவின் முக்கிய நிர்வாக அமைப்பான பெடரல் செக்யூரிட்டி சர்வீஸ் மீது ட்ரோன் தாக்குதலை நடத்தி இருக்கிறது. இந்த தாக்குதலில் அந்த அமைப்பின் மேற்பகுதி முற்றிலும் தகர்த்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.