Mammootty Next Movie Update: மூன்றாவது முறையாக ஒரே இயக்குனருடன் கைகோர்த்த மம்முட்டி; டர்போ படத்தின் அசத்தல் அப்டேட் இதோ.!
மதுர ராஜா, போக்கிரி ராஜா ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றி இருந்த மம்முட்டி - இயக்குனர் வைசாக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அக்டோபர் 24, திருவனந்தபுரம் (Cinema News): மலையாள திரையுலகின் சூப்பர்ஸ்டாராக இருந்து வருபவர் மம்முட்டி (Mammootty). இவர் இயக்குனர் வைஷாக்குடன் தற்போது மூன்றாவது முறையாக இணைந்து பணியாற்றவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. Thane Dog Attack: குழந்தையை கொடூரமாக தாக்கிய நாய்கள்; பூங்காவுக்குள் நடந்த பயங்கரம்.. பதைபதைப்பு காட்சிகள் வைரல்.!
நடிகர் மம்மூட்டி - வைசாக் கூட்டணியில் உருவாகும் இத்திரைப்படத்திற்கு டர்போ (Turbo Malaiyalam Movie) என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இவர்கள் இருவரும் மதுர ராஜா, போக்கிரி ராஜா ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றி இருந்தனர். இப்படங்கள் நல்ல வெற்றியை அடைந்தது.
இப்படத்தை மம்மூட்டியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான மம்மூட்டி கம்பெனி (Mammootty Kampany) தயாரிக்கிறது. மிதுன் மனுவில் தாமஸ் படத்திற்கான வசனங்களை எழுதுகிறார். Tiruvannamalai Accident: அரசு பேருந்து - கார் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து; 5 பேர் பரிதாப பலி..! திருவண்ணாமலையில் சோகம்.!
சரஸ்வதி பூஜையான இன்று மம்முட்டியின் திரைப்பட அறிவிப்பு வெளியாகியுள்ளது, அவரின் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் படப்பிடிப்பும் இன்று முதல் தொடங்குகிறது. 100 நாட்களுக்குள் படப்பிடிப்பை நடத்தி முடிக்க தயாரிப்பு குழு திட்டமிட்டுள்ளது.
Presenting The Title Poster of Our Fifth Production Venture
.@turbothefilm #TurboMovie @MKampanyOffl pic.twitter.com/X1SKpmOYfa
— Mammootty (@mammukka) October 24, 2023
(The above story first appeared on LatestLY on Oct 24, 2023 12:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

