Cook with Comali Season 5: குக் வித் கோமாளியில் இணையும் பிரபல நடிகர்.. இனி பட் கிடையாது..!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட்க்கு பதிலாக பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜன் கலந்து கொள்ளப் போகிறார் என்று கூறப்படுகிறது.

Madhampatty Rangaraj (Photo Credit: Facebook)

மார்ச் 15, சென்னை (Cinema News): குக் வித் கோமாளி (Cook with Comali ) நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் இருக்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியில் இருந்து அடுத்தடுத்து இயக்குனர், தயாரிப்பாளர், நடுவர் என்று விலகிக் கொண்டு இருக்கின்றனர். இது ரசிகர்களுக்கு பெருத்த கஷ்டத்தை கொடுத்திருக்கும் நிலையில், அவர்களுக்கு ஆறுதல் கொடுக்கும் வகையில் இணையத்தில் ஒரு செய்தி பரவி வருகிறது. அதாவது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட்க்கு (Venkatesh Bhat) பதிலாக பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜன் (Madhampatty Rangaraj) கலந்து கொள்ளப் போகிறார் என்று கூறப்படுகிறது. Govt Slashes Petrol, Diesel Prices: 2 ஆண்டுகளுக்கு பின் நடந்த அதிசயம்.. குறைந்த பெட்ரோல், டீசல் விலை..!

மாதம்பட்டி ரங்கராஜ் கோவையைச் சேர்ந்தவர். கோவை, மாதம்பட்டியில் 'மாதம்பட்டி பாகசாலா' என்கிற பெயரில் கேட்டரிங் தொழிலை நடத்தி வருகிறார். சமையல் கலைஞராகக் கிடைத்த புகழ் சினிமாவையும் இவரை நோக்கித் திருப்பியது. 'மெகந்தி சர்க்கஸ்' படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து தற்போது சில படங்களிலும் நடித்து வருவதாகத் தெரிகிறது. அதேபோல் சமையலிலும் இவரது திறமை நாளுக்கு நாள் வளர்ந்து இன்று தமிழ்நாட்டில் எந்த வி.ஐ.பி. வீட்டு விசேஷம் என்றாலும் இவரது சமையல்தான்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement