மார்ச் 15, புதுடெல்லி (New Delhi): கடந்த 2022 மே மாதத்திற்கு பிறகு முதல் முறையாக பெட்ரோல், டீசல் விலையை குறைத்து (Petrol, Diesel Prices) எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. அதன்படி, இந்த விலை குறைப்பு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. கச்சா எண்ணெய் விலை மாற்றத்திற்கு தகுந்தவாறு பெட்ரோல், டீசல் விலை தீர்மானவம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. Murugan Found In River: ஆற்றுக்குள் தோன்றிய ஆறு படையப்பன்.. திருவள்ளூர் மாவட்டத்தில் குவியும் பக்தர்கள்..!
இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2 குறைக்கப்படும் என்று மத்திய அரசு நேற்று இரவு அறிவித்திருந்தது. அதன்படி, தற்போது 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 100.75 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.34 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 23 காசுகள் குறைந்து ரூ.102.63-க்கு விற்பனையாகி வருகிறது. டீசல் விலை லிட்டருக்கு 22 காசுகள் சரிந்து ரூ.94.24-க்கு விற்பனையாகி வருகிறது.