Kavita Chaudhary Of Udaan Fame Dies: பிரபல சீரியல் நடிகை கவிதா சவுத்ரி மரணம்.. ரசிகர்கள் சோகம்..!
உதான் படத்தில் ஐபிஎஸ் அதிகாரி கல்யாணி சிங் கேரக்டரில் நடித்து பிரபலமான நடிகை கவிதா சவுத்ரி மாரடைப்பால் அமிர்தசரஸில் காலமானார்.
பிப்ரவரி 16, டெல்லி (Delhi): டிடி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உதான் (Udaan) என்ற தொடரில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்தவர் தான் கவிதா சவுத்ரி (வயது 67). உதான் தொடரை கவிதாவே எழுதி இயக்கினார் என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். சேகர் கபூர், உத்தரா பாகர், டாக்டர் அனில் குமார் ரஸ்தோகி, விக்ரம் கோகலே, கஞ்சன் சௌத்ரி பட்டாச்சார்யா, அகிலேந்திர மிஸ்ரா மற்றும் சதீஷ் கௌஷிக் ஆகியோர் தொலைக்காட்சி தொடரில் முக்கிய வேடங்களில் நடித்தனர். Man Killed By Lion: சிங்கத்துடன் செல்ஃபி.. கடுப்பான சிங்கம் அடித்து இளைஞர் உயிரிழப்பு..!
கவிதா சவுத்ரி (Kavita Chaudhary) சில வருடங்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த இவர் மாரடைப்பால் நேற்று இரவு அமிர்தசரசில் காலமானார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருடைய இறுதி சடங்குகள் இன்று நடைபெற உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவரின் மறைவிற்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
(The above story first appeared on LatestLY on Feb 16, 2024 05:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

