Vettrimaran’s Secret Meetings: வெற்றிமாறனுடன் மேற்கொள்ளப்படும் ரகசிய சந்திப்பு: சூர்யா படத்திற்கு சிக்கலை உண்டாக்குமா?

வெற்றிமாறன்-சூர்யா இணையவிருக்கும் வாடிவாசல் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தள்ளிப் போய்க் கொண்டிருக்கும் நிலையில், நடிகர் விஜயின் மேனேஜர் வெற்றிமாறனுடன் ரகசிய சந்திப்பை மேற்கொண்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Actor Vijay, Actor Surya, Director Vettrimaran (Photo Credit: Twitter/Twitter/Wikipedia)

ஆகஸ்ட் 30, சென்னை (Cinema News): தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் சூர்யாவிற்கு  எப்போதும்  தனி ரசிகர் பட்டாளம்  இருக்கிறது. இவர் தற்போது கங்குவா படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார். இந்தப் படம் முடிந்த பிறகு இவர் வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சி எஸ் செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலை கதை களமாக வைத்து இந்தப் படத்தை வெற்றிமாறன் இயக்க உள்ளார்.

ஜல்லிக்கட்டை மையப்படுத்தி எடுக்கவிருக்கும் இந்தப் படம் சூர்யாவிற்கு  திருப்புமுனையாக இருக்கும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு தன்னை தயார்படுத்திக் கொள்வதற்காக சூர்யா ஜல்லிக்கட்டு காளைகளுடன் பழகி வருவதாகக் கூறப்படுகிறது. Sep 2023 Launching Mobiles: செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்படவுள்ள ஸ்மார்ட்போன்கள் என்னென்ன?.. நீங்கள் எதிர்பார்த்த அட்டகாசமான தகவல் இதோ.!

இந்தப் படத்திற்கு கால அவகாசம் தேவைப்பட்ட காரணத்தால் தான் சூர்யாவும் வெற்றி மாறனும் தங்களை வெவ்வேறு படங்களில் ஈடுபடுத்திக் கொண்டனர். கங்குவா படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா சுதா கொங்குரா இயக்கத்திலும் நடிக்க இருக்கிறார். இயக்குனர் வெற்றிமாறன் இன்னும் விடுதலை 2 படப்பிடிப்பில் மும்முரமாக இருப்பதால் வாடிவாசல் படத்திற்கு    தயாராகவில்லை.

இந்த நிலையில் வெற்றிமாறனை நடிகர் விஜய்யின் மேனேஜர் அடிக்கடி ரகசியமாக சந்தித்து இருக்கிறார். இந்த சந்திப்பு எதற்காக என்பது இதுவரை தெரியவில்லை. இருப்பினும் விஜய், வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் போது வேறொரு பரிமாணத்தில் காட்சியளிப்பார். இது விஜய் ரசிகர்களுக்கு  சந்தோஷமான தகவலாக இருக்கும். அதே சமயம் நடிகர் சூர்யாவின்  எதிர்பார்ப்புகளும் முயற்சியும் வீணாகிவிடுமோ என்ற சந்தேகமும் எழுந்திருக்கிறது.



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif