Bank Employee Trapped In Train And Death: ரயிலில் சிக்கி வங்கி ஊழியர் பலி - திருடனை பிடிக்க முயன்ற போது நேர்ந்த சோகம்..!
புனே செல்வதற்காக ரயிலில் பயணம் செய்த வங்கி ஊழியரின் செல்போனை திருடிச் சென்ற வாலிபரை பிடிக்க முயன்ற போது, ரயிலில் சிக்கிக்கொண்ட வங்கி ஊழியர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
மார்ச் 30, புனே (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேயை சேர்ந்தவர் பிரபாஸ் (வயது 24). இவர் அங்குள்ள தனியார் வங்கியில் காசாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், ஹோலி பண்டிகையை கொண்டாடுவதற்காக மும்பை வந்தார். United Airlines Flight Affect Air Turbelance: திடீரென மாறிய காற்றின் வேகம்; நடுவானில் தத்தளித்த விமானம்.. பயணிகள் உடல்நலக்கோளாறால் அவதி.!
இதனையடுத்து, புனே செல்வதற்காக சித்தேஷ்வர் ரயிலில் பயணம் (Trying To Catch Thief) செய்துள்ளார். பிரபாஸ், ரயிலின் வாசல் அருகே நின்றுகொண்டு செல்போன் பேசிக்கொண்டிருந்தார். ரயில் விட்டல்வாடி ரயில் நிலையம் அருகே மெதுவாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், ஆகாஷ் ஜாதவ் (வயது 27) என்ற இளைஞர் அவரின் செல்போனை பறித்து கொண்டு ஓடியுள்ளார். உடனே பிரபாஸ் திருடனை பிடிக்க வேண்டும் என்று ஓடும் ரயிலில் இருந்து குதித்துள்ளார். அவர் நிலை தடுமாறி ரயிலில் சிக்கிக்கொண்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த ரயில்வே காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு, மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சேர்த்தனர். இதுதொடர்பாக, செல்போன் திருடிய ஆகாஷ் ஜாதவ் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்த நிலையில், அம்பிவிலி ரயில் நிலையத்தில் திருடனை மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.