Indian Bank Job Alert (Photo Credit: @MyIndianBank X / Pixabay)

செப்டம்பர் 27, சென்னை (Chennai News): 2025 ஆம் ஆண்டுக்கான இந்தியன் வங்கி சிறப்பு அதிகாரி பிரிவில் இருக்கும் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி தகவல் தொழில்நுட்பம், கார்ப்பரேட் கிரெடிட் அனலிஸ்ட், நிதி அனலிஸ்ட், ரிஸ்க் மேனேஜ்மென்ட், ஐடி ரிஸ்க் மேனேஜ்மென்ட், டேட்டா அனலிஸ்ட், கம்பெனி செயலாளர் மற்றும் சிஏ உட்பட பல பிரிவுகளில் தலைமை மேனேஜர், சீனியர் மேனேஜர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தமாக 171 காலிப் பணியிடங்களுக்கு வாய்ப்புகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளன. அக்டோபர் 13ஆம் தேதி வரை இந்த பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. Canara Bank Job: தேர்வு இல்லாமல் வங்கியில் வேலை.. டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க.!

பணி குறித்த விபரங்கள் :

காலிப்பணியிடங்கள் :

  • தலைமை மேனேஜர் - 41
  • சீனியர் மேனேஜர் - 70
  • மேனேஜர் - 60
  • மாற்றுத்திறனாளிகளுக்கான பணியிடங்கள் - 5

வயது வரம்பு :

  • தலைமை மேனேஜர் - 28 முதல் 36 வரை
  • சீனியர் மேனேஜர் - 25 முதல் 33 வரை
  • மேனேஜர் - 23 முதல் 31 வரை

கல்வித்தகுதி :

  • தகவல் தொழில்நுட்ப துறையில் கணினி அறிவியல், கணினி பயன்பாடு, தகவல் தொழில்நுட்பம், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேஷன் பிரிவுகளில் 4 ஆண்டுகள் பொறியியல் பட்டப்படிப்பு அல்லது முதல்நிலை பட்டப்படிப்பு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • கூடுதல் சான்றிதழ் படிப்புகளும் அவசியம்.
  • நிதித்துறையில் வேலை பார்க்க சிஏ(CA) பட்டப்படிப்புடன் 2 வருடம் எம்பிஏ / பிஜி டிப்ளமோ படித்தவர்களுக்கு அவசியம்.
  • ரிஸ்க் மேனேஜ்மென்ட் துறையில் சிஏ கணிதம், நிதி பொருளாதாரம், புள்ளியியலில் இளங்கலை, முதுகலை பட்டம் இருக்க வேண்டும். பதவிக்கேற்ப அனுபவம் முக்கியம்.

சம்பள விபரம் :

  • மேனேஜர் - ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை
  • சீனியர் மேனேஜர் - ரூ.85,920 முதல் 1,05,280 வரை
  • தலைமை மேனேஜர் - ரூ.1,02,300 முதல் 1,20,940 வரை

தேர்வு செய்யப்படும் முறை :

  • விண்ணப்பதாரர்களின் தகுதியின் அடிப்படையில் நேர்காணல் நடைபெறும். எழுத்து தேர்வுக்கு பின் நேர்காணலுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
  • எழுத்து தேர்வில் ஆங்கிலம் பணி குறித்த அறிவு, பகுத்தறிவு, நுண்ணறிவின் அடிப்படையில் 160 கேள்விகளுடன் 220 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும்.
  • நேர்முகத்தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.
  • விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், திறமையும் வாய்ந்தவர்கள் https://indianbank.bank.in/என்ற இந்தியன் வங்கியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
  • கட்டணமாக ரூ.1000 வசூலிக்கப்படும். எஸ் டி/எஸ் சி பிரிவினருக்கு ரூ.175 கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.
  • அக்டோபர் 13ஆம் தேதிக்குள் விண்ணப்பிப்பது நல்லது.

தேர்வு நடைபெறும் நகரங்கள்:

171 காலிப்பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு சென்னை, மதுரை, நெல்லை, சேலம், திருச்சி, கோவை, வேலூர், விருதுநகர், தஞ்சாவூர், நாகர்கோவிலில் நடைபெறும்.