நவம்பர் 12, சென்னை (Chennai News): 2025 ஆம் ஆண்டை பொறுத்தவரையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவத்தை வழங்கியிருக்கும். அதுபோல 2026 ஆம் ஆண்டும் பல எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடும் ஒரு வருடமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் அரசு மற்றும் அரசு நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு விடுமுறை நாட்களை திட்டமிட உதவும் நோக்கில் தயாரிக்கப்பட்ட இந்த பட்டியலானது பணியாளர்கள், வங்கிகள், பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளிகள் ஆகியவற்றிற்கும் பொருந்தும். அதன்படி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளையும் சேர்த்து மொத்தமாக 24 நாட்கள் அடுத்த ஆண்டு பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைவு.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..!
2026 ஆம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை நாட்கள் (Holiday List):
- ஆங்கிலப் புத்தாண்டு - 01.01.2026 - வியாழக்கிழமை
- பொங்கல் - 15.01.2026 - வியாழக்கிழமை
- திருவள்ளுவர் நாள் - 16.01.2026 - வெள்ளிக்கிழமை
- உழவர் திருநாள் - 17.01.2026 - சனிக்கிழமை
- குடியரசு நாள் - 26.01.2026 - திங்கட்கிழமை
- தைப்பூசம் - 01.02.2026 - ஞாயிற்றுக்கிழமை
- தெலுங்கு வருடப் பிறப்பு - 19.03.2026 - வியாழக்கிழமை
- ரம்ஜான் - 21.03.2026 - சனிக்கிழமை
- மகாவீரர் ஜெயந்தி - 31.03.2026 - செவ்வாய்க்கிழமை
- வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு - 01.04.2026 - புதன்கிழமை
- புனித வெள்ளி - 03.04.2026 - வெள்ளிக்கிழமை
- தமிழ்ப் புத்தாண்டு - 14.04.2026 - செவ்வாய்க்கிழமை
- மே நாள் - 01.05.2026 - வெள்ளிக்கிழமை
- பக்ரீத் - 28.05.2026 - வியாழக்கிழமை
- மொகரம் - 26.06.2026 - வெள்ளிக்கிழமை
- சுதந்திர நாள் - 15.08.2026 - சனிக்கிழமை
- மிலாதுன் நபி - 26.08.2026 - புதன்கிழமை
- கிருஷ்ண ஜெயந்தி - 04.09.2026 - வெள்ளிக்கிழமை
- விநாயகர் சதுர்த்தி - 14.09.2026 - திங்கட்கிழமை
- காந்தி ஜெயந்தி - 02.10.2026 - வெள்ளிக்கிழமை
- ஆயுத பூஜை - 19.10.2026 - திங்கட்கிழமை
- விஜயதசமி - 20.10.2026 - செவ்வாய்க்கிழமை
- தீபாவளி - 08.11.2026 - ஞாயிற்றுக்கிழமை
- கிருஸ்துமஸ் - 25.12.2026 - வெள்ளிக்கிழமை
தமிழ்நாட்டில் உள்ள வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டும் பொருந்தும்.