செப்டம்பர் 24, சென்னை (Chennai News): இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கி கனரா வங்கி (Canara Bank). தற்போது கனரா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தேசிய அளவிலும், தமிழக அளவிலும் மொத்தமாக 3,500 பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் மட்டும் 394 இடங்கள் மற்றும் புதுச்சேரியில் 4 இடங்கள் காலியாக நிரப்பப்பட இருக்கின்றன. பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் நபர்கள் தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் இல்லாமல் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தமிழ் மொழி தெரிந்திருப்பது அவசியமாகும். இந்த வேலை தொடர்பான விவரங்கள் பின்வருமாறு காணலாம். TCS Layoff Controversy: 12,000+ ஊழியர்கள் கட்டாய ராஜினாமா.. பணியாளர்களை மிரட்டி வெளியேற்றும் டிசிஎஸ்?
பணி விபரங்கள் :
- காலிப்பணியிடங்கள் - 394
- வயது வரம்பு - 20 முதல் 28 வரை
- கல்வித்தகுதி - பட்டப்படிப்பு
- மொழி - தமிழ் கட்டாயம்
- தேர்வு செய்யப்படும் முறை - மொழித்திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
- விண்ணப்பிக்கும் முறை - ஆன்லைன் (https://www.canarabank.bank.in/)
- விண்ணப்ப கட்டணம் - ரூ.500
- விண்ணப்பிக்க கடைசி தேதி - 12/10/2025
தமிழ் மொழியில் பயிலாதவர்கள் மொழித்திறன் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். 12ம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மொழித்திறன் தேர்வு கிடையாது. தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு 1 ஆண்டு பயிற்சி வழங்கப்படும். அதேபோல பயிற்சி காலத்தில் ஊதியமாக மாதம் ரூ.15,000 வழங்கப்படும். கூடுதல் விபரங்களுக்கு https://www.canarabank.bank.in/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிப்பது எப்படி?
- தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் கனரா வங்கியின் அதிகாரபூர்வ இணையதளமான https://www.canarabank.bank.in/ என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.
- அதன் பின் APPLY NOW என்பதை கிளிக் செய்து பதிவு செய்ய வேண்டும்.
- பதிவு செய்யும்போது தேவையான விபரங்களை பிழையின்றி வழங்க வேண்டும்.
- விண்ணப்பதாரரின் புகைப்படம், கையொப்பம் மற்றும் சான்றிதழ்களை பதிவேற்ற வேண்டும்.
- இறுதியாக விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி தங்களது விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.