Love Couple Suicide Attempt: காதல் ஜோடி மொபைல் டவரில் ஏறி தற்கொலை முயற்சி.. அடுத்து நடந்தது என்ன..?
உத்தர பிரதேசத்தில் காதல் ஜோடி இருவரும் மொபைல் டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்றுள்ள வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
செப்டம்பர் 02, மொராதாபாத் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், மொராதாபாத் (Moradabad) மாவட்டத்தில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 31)இரவு காதல் ஜோடி (Love Couple) ஒன்று மொபைல் டவரில் ஏறினர். அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்துள்ளனர். மேலும், திருமணம் முடியும் வரை கீழே வரமாட்டோம் என்று இருவரும் கூறியுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இருவரிடமும் நீண்ட நேரமாக அவர்களை கீழே இறங்க வலியுறுத்தினர். ஆனால், இருவரும் கீழே இறங்க தயாராக இல்லை. பின்னர், திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளிக்கப்பட்டதையடுத்து, காதல் ஜோடி மொபைல் டவரில் (Mobile Tower) இருந்து கீழே இறங்கினர். முதியா கெடா கிராமத்தைச் சேர்ந்த சுமித் (வயது 23) என்ற வாலிபர், ஜான்பூரைச் சேர்ந்த சாந்தினி (வயது 19) என்ற பெண்ணை நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார். சுமித், ஜான்பூரில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். Young Scientist Nunavath Ashwini Dead: மழையில் அடித்துச் செல்லப்பட்ட கார்.. பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண் விஞ்ஞானி..!
இந்நிலையில், இவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு காதலியுடன் தனது கிராமத்திற்கு வந்துள்ளார். மறுபுறம், பெண்ணின் குடும்பத்தினர் அவரைத் தேடி வந்தனர். அப்போது, தனது மகள் மொராதாபாத்தில் இருப்பது தெரிய வந்ததை அடுத்து, பெண்ணின் குடும்பத்தினர் அனைவரும் அங்கு சென்றனர். பின்னர், பெண்ணை தங்களது வீட்டிற்கு அழைத்து செல்ல முயன்றுள்ளனர். மேலும், இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், காதல் ஜோடி அருகில் இருந்த மொபைல் டவரில் ஏறினர். மொபைல் டவரில் ஏறி இருவரும் குதித்து தற்கொலை செய்துகொள்ள போவதாக மிரட்டல் விடுத்தனர்.
இதனையடுத்து, காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் நீண்ட நேரமாக கீழே இறங்கும்படி வலியுறுத்தியும் அவர்கள் கீழே இறங்க மறுத்துள்ளனர். தங்களது காதலை ஏற்றுக்கொண்டு எங்களுக்கு திருமணம் செய்துவைக்க சம்மதிக்குமாறு கேட்டுக்கொண்டனர். சுமார் 2 மணி நேரமாக நடந்த இச்சம்பவம், திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்த பிறகு இருவரும் மொபைல் டவரில் இருந்து கீழே இறங்கினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மொபைல் டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்ற காதல் ஜோடி: