Nunavath Ashwini (Photo Credit: @sudhakarudumula X)

செப்டம்பர் 02, தெலுங்கானா (Telangana News): தென்மேற்கு பருவமழையானது இந்தியாவில் தீவிரமடைந்து பல மாநிலங்களில் மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறி ஆந்திராவின் கலிங்கபட்டினம் பகுதியில் கரையை கடந்தது. இதனால் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. ஆந்திராவில் உள்ள விஜயவாடா, அமராவதி, தெலுங்கானாவில் உள்ள ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் பெய்த கனமழை நகரின் பல்வேறு இடங்களை வெள்ளக்காடாக்கியது. Vijayawada Rains: ஆந்திராவை புரட்டியெடுத்த கனமழை; வெள்ளத்தில் தத்தளிக்கும் நகரங்கள்..!

தெலுங்கானாவில் கம்மம் மாவட்டம், சிங்கரேணி மண்டலத்தில் உள்ள கங்காரம் தாண்டாவைச் சேர்ந்த ராய்ப்பூரின் ICAR - நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பயோடிக் ஸ்ட்ரெஸ் மேனேஜ்மென்ட் ஸ்கூல் ஆஃப் க்ராப் ரெசிஸ்டன்ஸ் சிஸ்டம் ரிசர்ச்சின் இளம் விஞ்ஞானி டாக்டர் நுனாவத் அஷ்வினி. இவரது தந்தை நுனாவத் மோதிலால். இவர்கள் இருவரும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தபோது, ​​மரிபெடா மண்டலத்தில் உள்ள புருஷோத்தமய்யகுடேம் என்ற இடத்தில் பெருக்கெடுத்த அக்கேருவாகு ஓடையில் அவர்களது கார் அடித்துச் செல்லப்பட்டது. தொடர்ந்து அவர்களின் வாகனம் ஓடிக்கொண்டிருந்த நீரில் மூழ்கியது. இதில் டாக்டர் அஸ்வினியின் உடல் அக்கேருவாகு பாலம் அருகே கண்டெடுக்கப்பட்டது. அவரது தந்தை மோதிலாலைக் கண்டுபிடிக்க மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.