Car Collided With Multiple Bikes: அதிவேகமாக வந்த கார் கண்ணிமைக்கும் நேரத்தில் வாகனங்களை அடித்து தூக்கி பயங்கர விபத்து; 3 பேர் பலி.., பதற வைக்கும் காட்சிகள்..!

மகாராஷ்டிராவில் அதிவேகமாக வந்த சான்ட்ரோ கார், பல இருசக்கர வாகனங்களின் மீது மோதிய விபத்தில் கார் ஓட்டுநர் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

Kolhapur Accident Visuals (Photo Credit: @TimesNow X)

ஜூன் 04, கோலாப்பூர் (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கோலாப்பூரில், சைபர் சௌக்கில் நேற்று மதியம் போக்குவரத்து வழக்கம்போல் இருந்தது. இந்த சாலையில் போக்குவரத்து விளக்குகள் இல்லாமல் அனைத்து வாகனங்களும் குறுக்கு வழியில் சென்றன. இதில், மூன்று இருசக்கர வாகனங்கள் நேராகச் சென்று கொண்டிருந்தன, 4-வது இருசக்கர வாகனம் வலமிருந்து இடமாகச் சந்திப்பைக் கடந்தது. இந்த சமயத்தில் அதிவேகமாக வந்த சான்ட்ரோ கார், இருசக்கர வாகனங்கள் மீது பயங்கரமாக மோதி (Car Crashes Into Multiple Bikes On The Road), பல அடி தூரத்தில் பயணிகளை தூக்கி வீசியது. பின், நின்று கொண்டிருந்த வாகனம் மற்றும் அருகில் உள்ள மின்கம்பத்தில் கார் மோதி கவிழ்ந்தது. OnePlus 12 Glacial White: புத்தம்புது கலர் மாடலில் வெளியாகும் ஒன்பிளஸ் 12; விலை மற்றும் விவரக்குறிப்பில் மாற்றம் உண்டா..?

இந்த விபத்தில் சான்ட்ரோ கார் ஓட்டுநர் மற்றும் இருவர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். பயங்கரமான கோர விபத்து அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. சான்ட்ரோ கார் ஓட்டுநரான வசந்த் எம் சவான் (வயது 72), கோலாப்பூர் சிவாஜி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்து ஓய்வு பெற்றவர் ஆவார்.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர், காரை ஓட்டி வந்த சவானுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், வேகமாக வந்ததால், கார் கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துவிட்டனர். 6 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். கீழே இணைக்கப்பட்ட வீடியோவில், அதிவேகமாக வந்த கார், சாலையோரத்தில் உள்ள மின்கம்பத்தில் மோதி பல இருசக்கர வாகனங்களை மோதியதைக் காணலாம்.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now