Navi Mumbai Fire Accident (Photo Credit : @IndiaToday X)

அக்டோபர் 21, நவி மும்பை (Navi Mumbai News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நவி மும்பை, வாஷி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. எம்ஜி வளாகத்தில் உள்ள இந்த குடியிருப்பில் இன்று அதிகாலை 12.30 மணி அளவில் 10 வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கர தீ அடுத்தடுத்த மாடிகளுக்கும் மளமளவென பரவியது. இந்த விபத்தில் 10 வது மாடியில் வசித்து வரும் மூதாட்டி, 12 வது மாடியில் வசித்து வரும் தம்பதி மற்றும் 6 வயது சிறுமி உள்ளிட்டோர் உயிரிழந்துள்ளனர்.

தீ விபத்தில் 10 பேர் படுகாயம்:

மேலும் 10 பேர் படுகாயம் அடைந்த நிலையில், காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வாஷி தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தீ விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. Breaking: தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. 2 நாட்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை.!

பட்டாசுகள் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா?

தீபாவளி நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் மின் கசிவு காரணமா? அல்லது பட்டாசுகள் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாகவே நவி மும்பை பகுதியில் அடுத்தடுத்து தீ விபத்து சம்பவங்கள் ஏற்பட்டு வருவது சோகத்தை உண்டாக்கியுள்ளது.

தீபாவளி நள்ளிரவில் பரவிய தீயால் 4 பேர் மரணம்: