அக்டோபர் 16, அலகாபாத் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூரைச் சேர்ந்த 16 வயது சிறுமி, கடந்த 2005ம் ஆண்டு தனது காதலருடன் ஓட்டம் பிடித்தார். சிறுமியை மத்திய பிரதேசம் மாநிலத்துக்கு அழைத்துச் சென்ற நபர் சில மாதங்கள் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, பின் கைவிட்டுச் சென்றததாக கூறப்படுகிறது. இந்த விஷயம் குறித்து சிறுமியை கண்டறிந்து தரக்கூறி பெற்றோர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து சிறுமியை மீட்டனர். மேலும், சிறுமியை காதலித்து அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவருக்கு மாவட்ட நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. தற்போது சிறையில் இருந்த நபர், தன்னை விடுதலை செய்கூறி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். Donald Trump: இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்.. ரஷ்யாவுக்கு குட்பை சொல்லும் இந்தியா? டிரம்ப் கிளப்பிய புது சர்ச்சை.!
காதல் விவகாரத்தில் கடத்தல், பாலியல் வன்கொடுமை இல்லை:
இந்த மனு தனிநீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அவர் இளைஞரை விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும், 2017க்கு முன் 16 வயதுக்கு மேற்பட்ட மனைவியுடன் உடலுறவு கொள்வது பாலியல் வன்கொடுமை அல்ல என குறிப்ட்ட நீதிபதி, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கோள் காட்டி 2007 ஆம் ஆண்டு தண்டனை உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். கடந்த 2005 ஆம் ஆண்டில் சிறுமி விருப்பத்துடன் காதலருடன் சென்று இளைஞரை மணந்ததால், கடத்தலுக்கான எந்த ஆதாரமும் இல்லை. திருமணத்திற்குப் பிறகு இவர்களிடையே பிரச்சனை ஏற்பட்டதால், எந்த பாலியல் வன்கொடுமை குற்றமும் நிரூபிக்கப்படவில்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் இளைஞர் விடுதலை செய்யப்பட உத்தரவிடப்பட்டுள்ளது.