ஜூன் 04, சென்னை (Technology News): ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தனது OnePlus 12 ஸ்மார்ட் போனின் புதிய வண்ண விருப்பத்தை, தற்போதுஇந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 12 Glacial White (OnePlus 12 Glacial White Smart Phone) கலர் மாடலை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட் போன் கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது, ஃப்ளோவி எமரால்டு மற்றும் சில்க்கி பிளாக் வண்ண விருப்பங்களில் ஏற்கனவே விற்பனைக்கு கிடைக்கின்றது.
மேலும், புதிதாக வெளியாகவுள்ள Glacial White என்ற வண்ண விருப்பம் கொண்ட OnePlus 12 ஸ்மார்ட் போன், ஏற்கனவே இரு வண்ணக்களில் இந்தியாவில் வெளியான அதே சிறப்பம்சங்களுடன் வரும். 12GB RAM மற்றும் 256GB ROM என்ற ஒரே மாடலில் விற்பனையாகும். இது, ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 சிப்செட்டைக் கொண்டிருக்கும். Papaya Benefits: பப்பாளியில் உள்ள மருத்துவ பயன்கள் என்னென்ன..? விவரம் உள்ளே..!
இதன் விலை ரூ. 64,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமேசான் (Amazon) மற்றும் OnePlus Experience கடைகள் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள அதிகாரப்பூர்வ பார்ட்னர் ஸ்டோர்களில் விற்பனைக்கு வரும். வருகின்ற ஜூன் 6-ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகின்றது. இந்த ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள் அனைத்தும் ஏற்கனவே வெளியான மாடலைப் போலவே இருக்கும். இதில், 6.82-inch quad-HD+ (1,440 x 3,168 pixels) LTPO 4.0 AMOLED திரையை கொண்டுள்ளது.
இந்த கலர் மாடலில், Qualcomm's Snapdragon 8 Gen 3 SoC உடன் 12GB LPDDR5x ரேம் மற்றும் 256GB UFS 4.0 இன்பில்ட் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது, ஆண்ட்ராய்டு 14-அடிப்படையிலான OxygenOS 14ல் இயங்குகின்றது. சோனி LYT-808 சென்சார், 48MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 64MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸுடன் 50MP பிரைமரி ஷூட்டர் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா ஆகிய அம்சங்களுடன் வருகிறது.