இளம்பெண் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை.. வாலிபர் விவரீத முடிவு..!

கேரளாவில் இளம்பெண் ஒருவர் தனது ஆண் நண்பரால் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட (Woman Burnt to Death) சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Woman Burnt to Death Kerala (Photo Credit: @News18Kerala X)

ஆகஸ்ட் 21, கண்ணூர் (Kerala News): கேரள மாநிலம், கண்ணூர் (Kannur) மாவட்டத்தில் உள்ள இரிக்கூர் அருகே குற்றியாட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் அஜீஷ். இவர், துபாயில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பிரவீணா ( வயது 39). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். பிரவீணா தனது மாமனார் அச்சுதன் மற்றும் மாமியாருடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், கூட்டாவு பகுதியைச் சேர்ந்த ஜிஜேஷ் என்பவருக்கும், இவருக்கும் இடையே நெருக்கமான பழக்கம் இருந்து வந்துள்ளது. GoM Meeting on GST Reforms: இரு அடுக்கு ஜிஎஸ்டி திட்டத்திற்கு ஒப்புதல்.. 12% மற்றும் 28% வரி விகிதம் நீக்கம்..?

பெண் எரித்துக்கொலை:

இந்நிலையில், ஜிஜேஷ் நேற்று (ஆகஸ்ட் 20) மதியம், பிரவீணாவின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டில் இருந்த பிரவீணாவின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். பின்னர், தன் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இருவரின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்துள்ளனர். அப்போது, இவர்கள் இருவரும் தீக்காயங்களுடன் கிடப்பதை பார்த்ததும், உடனே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீஸ் விசாரணை:

தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், இருவரையும் மீட்டு கண்ணூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். இன்று (ஆகஸ்ட் 21) காலை சிகிச்சை பலனின்றி பிரவீணா பரிதாபமாக உயிரிழந்தார். ஜிஜேஷ், உயிருக்கு ஆபத்தான நிலையில், தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement