மணமேடையில் இரண்டு பெண்களை மணந்த வாலிபர்.. வினோத சம்பவம்..!

தெலுங்கானாவில் வாலிபர் ஒருவர், ஒரே மேடையில் இரண்டு பெண்களை திருமணம் செய்துகொண்ட வினோத சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

Youth Marries 2 Women in the Same Wedding Ceremony (Photo Credit: @Bavazir_network X)

ஏப்ரல் 25, ஜெய்னூர் (Telangana News): தெலுங்கானா மாநிலம், ஜெய்னூர் (Jainoor) மண்டலத்தில் உள்ள அத்தேசாரா கிராமத்தை சேர்ந்த தம்பதி ரம்பாபாய்-பத்ருஷாவ். இவர்களது மகன் ஆத்ரம் சத்ருஷாவ். இவர், அதே கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். மேலும், பக்கத்து கிராமத்தை சேர்ந்த வேறொரு பெண்ணுடன் பழகி வந்திருக்கிறார். 21வது அடுக்குமாடி.. வழுக்கி விழுந்த தாய்.., 7 மாத குழந்தை பரிதாப பலி..!

2 பெண்களை மணந்த வாலிபர்:

இதனிடையே, இரண்டாவதாக காதலித்த பெண்ணுடன் இவருக்கு திருமணம் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. இச்செய்தியைக் கேட்ட அவருடைய முதல் காதலி அதிர்ச்சியடைந்து திருமணம் செய்தால், இவரை தான் திருமணம் செய்வேன் என்று அடம் பிடித்திருக்கிறார். இதனால், இரு பெண்களின் வீட்டு பெற்றோர்கள் சமரசம் பேசி சம்மதம் தெரிவித்து பிறகு, அவர்கள் இருவருக்கும் ஒரே மேடையில், மணமகனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ இதோ:

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement