நவம்பர் 28, கேரளா (Cinema News): தென்னிந்திய சினிமாவில் 80, 90களில் முன்னணி நடிகைகளாக விளங்கிய அம்பிகா மற்றும் ராதாவின் தாயார் சரசம்மா நாயர். இவர் கேரள மாநிலத்தில் உள்ள கல்லாரை பகுதியில் வசித்து வந்த நிலையில், நேற்று காலமானார். இவர் தனது இளம் வயதில் பெண் உரிமைக்காக போராடுவது, அரசியல் பணிகளில் ஈடுபடுவது என தீவிரம் காட்டி வந்தார். இந்த நிலையில் தனது 86 வது வயதில் இயற்கை எய்தினார். இது தொடர்பாக நடிகை அம்பிகா தனது இணையதள பக்கத்தில், "நான் வாழ்ந்தது என் அம்மாவுடன்… ஆனால் இன்று அவர் அப்பாவுடன் சேர்ந்துவிட்டார். இனி நான் மட்டுமே மீதம்" என மனம் உருகி தெரிவித்துள்ளார். இவரின் மறைவுக்கு முன்னணி பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நாளைய வானிலை: டிட்வா புயல் தாக்கம்.. தமிழகத்தில் ரெட் அலர்ட்.. புயல் காற்றுடன் விளாசப்போகும் கனமழை.!
நடிகை அம்பிகா உருக்கம்:
View this post on InstagramA post shared by Ambika (@starambika)
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)