நவம்பர் 18, சென்னை (Technology News): இந்திய ஸ்மார்ட்போன் விற்பனை சந்தையில், குறுகிய காலத்தில் தனது ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து பிரபலமடைந்த நிறுவனம் ஓப்போ (Oppo India). இந்த நிறுவனம் நவம்பர் 18ம் தேதியான இன்று மதியம் 12 மணியளவில் ஓப்போ பைண்ட் எக்ஸ்9 சீரிஸின் நேரடி விற்பனையை தொடங்கியது. இந்த நிகழ்வின் போது OPPO Find X9 மற்றும் OPPO Find X9 Pro ஸ்மார்போன்களை அறிமுகப்படுத்தியது. தூசி, நீர் எதிர்ப்பு IP68 மதிப்பீடுகளுடன், ColorOS 16 இயங்குதளமும் இதில் உள்ளது. இரண்டு ரக ஸ்மார்ட்போனில் 200 MP Hasselblad லென்ஸ் போன்ற சிறப்பம்சம் இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.74,999ல் இருந்து தொடங்குகிறது. Oppo Find X9 மாடலில் 12GB+256GB வகை ஸ்மார்ட்போனுக்கு இந்த விலை பொருந்தும். அதே நேரத்தில், 16GB+512GB ஸ்மார்ட்போனின் விலை ரூ.84,999 ஆக இருக்கலாம். OPPO Find X9 Pro 16GB + 512GB விலை ரூ. 99,999 ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. OPPO Find X9 6.59-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவுடன், 1.5K தெளிவுத்திறன் மற்றும் 120Hz ரீஃப்ரஷ் ரேட்டை கொண்டிருக்கும். 3,600 நைட்ஸ் வரை உச்ச பிரகாசம், 7,025mAh பேட்டரி, 50MP முதன்மை சென்சார், 50MP அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 50MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவையும் கூடுதல் சிறப்பம்சங்களாக இடம்பெற்று இருக்கும். Laptop Buying Tips: லேப்டாப் வாங்க நினைக்கிறீங்களா? அசத்தல் டிப்ஸ்... இதெல்லாம் தெரிஞ்சி வச்சிக்கோங்க.!
OPPO Find X9 சீரிஸை அறிமுகப்படுத்தியது ஓப்போ நிறுவனம்:
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)