நவம்பர் 21, துபாய் (World News): துபாயில் சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் பல நாடுகளைச் சேர்ந்த போர் விமானங்கள் பங்கேற்று, தங்களின் சாகசங்களை செய்து வருகின்றனர். பல விமானங்கள் வானில் சீறிப்பாய்ந்து பார்வையாளர்களை கவர்ந்தது. இந்நிலையில், இந்தியா சார்பில் கண்காட்சியில் பங்கேற்று இருந்த தேஜஸ் போர் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தின் பதறவைக்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளன. விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் மக்கள் இல்லை என்பதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தில் விமானி உயிரிழந்துள்ளார். Bangladesh Earthquake: வங்கதேச நிலநடுக்கத்தால் 6 பேர் மரணம்.. கொல்கத்தா, அசாமிலும் நில அதிர்வு.!
போர் விமானம் விழுந்து நொறுங்கிய வீடியோ:
🚨 BREAKING: Indian #Tejas fighter jet crashes during a display at the #DubaiAirShow.
Updates on pilot status awaited💔
— Sarcasm (@sarcastic_us) November 21, 2025
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)