Ayodhya Dham Airport & Railway Station: அயோத்தியில் இரயில், விமான நிலையங்களை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார் பிரதமர் மோடி..!
பலகட்ட போராட்டங்களுக்கு பின்னர் அயோத்தியில் ஸ்ரீ இராமர் கோவில் ஜனவரி மாதம் திறப்பு விழாவுக்கு தயாராகி வருகிறது.
டிசம்பர் 30, அயோத்தி (Ayodhya): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில், ஸ்ரீ ராமர் கோவில் சிலை நிறுவும் விழா மற்றும் கோவில் திறப்பு விழா ஜனவரி மாதம் 22ஆம் தேதி 2024 அன்று நடைபெறுகிறது. பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள இவ்விழாவை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்திய அளவில் பல முக்கிய பிரபலங்கள் நேரில் வரவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ராம பக்தர்களும் அயோத்தி சென்று குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரயில் நிலையம் திறப்பு: அயோத்தி நகரில் திறக்கப்படும் ராமர் கோவிலுக்கு உலகளாவிய சுற்றுலா பயணிகள் ஆண்டு முழுவதும் வந்து கண்டு செல்வார்கள் என்பதாலும், உள்ளூர் சுற்றுலா பெருகும் என்பதாலும், அந்நகரம் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. அயோத்தி இரயில் நிலையம் மறுசீரமைப்பு செய்யப்பட்டு இருக்கிறது. சர்வதேச விமான நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது.
விரைவு இரயில் சேவை தொடக்கம்: இன்று (30 நவம்பர் 2023) அயோத்தி நகரை டெல்லியுடன் இணைக்கும் அம்ரித் விரைவு இரயில் சேவையும், அயோத்தி சர்வதேச விமான நிலையமும் பிரதமர் மோடியால் திறக்கப்படுகிறது. மறு சீரமைப்பு செய்யப்பட்ட இரயில் நிலையமும் திறக்கப்படுகிறது. Polio Virus: பாகிஸ்தானில் உள்ள மாவட்டங்களில் பரவுகிறது போலியோ வைரஸ்; அச்சத்தில் மக்கள்.!
புத்துயிர் பெற்ற அயோத்தி நகரம்: சர்வதேச தரத்துடன் ரூ.1,450 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அயோத்தி விமான நிலையம், அயோத்தி ஸ்ரீ இராமர் கோவிலில் இருந்து 7 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இதனால் விமான பயணிகளும் எளிதில் கோவிலை அடையலாம். அயோத்தி இரயில் நிலையம், அயோத்தி தாம் இரயில் நிலையமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரூ.250 கோடி செலவிலும் புனரமைப்பு செய்யப்பட்டு இருக்கிறது.
மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைப்பு: 3 அடுக்குகள் கொண்ட அயோத்தி இரயில் நிலைய வளாகத்தில் லிஃப்ட், எஸ்கலேட்டர், உணவகம், பூஜை தேவைகளுக்கான கடைகள், ஆடை மையங்கள், குழந்தை பராமரிப்பு அறைகள், காத்திருப்பு அறைகள் ஆகியவை உலகத்தரத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இன்று பிரதமர் மோடி அயோத்தி சென்றுள்ள நிலையில், மேற்கூறிய நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து வருகிறார்.
இரயில் நிலையத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி:
அயோத்தி தாம் இரயில் நிலையம் திறப்பு:
அம்ரித் விரைவு இரயில் & வந்தே பாரத் இரயில் சேவை தொடக்கம்: