Ladies Finger Benefits: "உச்சி முதல் பாதம் வரை" - அடிக்கடி உணவில் வெண்டைக்காய் சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்..!
வைட்டமின் உட்பட பல்வேறு நன்மைகளை கொண்டுள்ள வெண்டைக்காய், உடலுக்கு ஏற்படுத்தும் நன்மைகளை இன்று தெரிந்துகொள்ளுங்கள்.
நவம்பர் 25, சென்னை (Health Tips): வெப்பமண்டல நாடுகளை பூர்வீகமாக கொண்ட வெண்டைக்காய் (Ladies Finger Benefits Tamil), இந்தியாவில் பிரதான உணவுப்பொருட்களில் ஒன்றாக இருக்கிறது. தமிழ்நாட்டில் எளிதில் அணுகக்கூடிய வகையில் பரவலாக கிடைக்கும் வெண்டைக்காய் (Vendaikkai Nanmaigal), பல்வேறு விதங்களில் சமைத்துசாப்பிடப்படுகிறது. வெண்டைக்காயில் இருக்கும் வைட்டமின்கள், கால்சியம் சத்து, தாமிரம், இரும்புச் சத்து, மெக்னீசியம், மக்னீசு, பாஸ்பிரஸ், துத்தநாகம் போன்றவை உடலுக்கு பல்வேறு நன்மைகளை தருகிறது.
நோய்க்கிருமிகளை எதிர்த்து போராடும்:
வெண்டைக்காயில் அதிகளவு காணப்படும் வைட்டமின் சி, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இயல்பாக ஏற்படும் தொற்றுநோய்களையும் விரட்டும். நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடுகள் மேம்படுத்தப்பட்டு, இரத்தத்தில் இருக்கும் வெள்ளை அணுக்களின் உற்பத்தி அதிகரிக்கப்படும். நோய்க்கிருமிகளை எதிர்த்து போராடத் தேவையான ஆற்றல் உடலுக்கு வழங்கப்படும். Pasipayaru Gravy Recipe: புரதச்சத்து நிறைந்த பாசிப்பயறு கிரேவி செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!
சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது:
வைட்டமின் கே, போலேட், இரும்புச் சத்து போன்றவை இரத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இரத்த சோகையை தீர்க்கவும், தடுக்கவும் வெண்டைக்காய் உதவும். எடை இழக்க விரும்பும் நபர்களுக்கு, வெண்டைக்காய் வரப்பிரசாதம் ஆகும். இரத்தத்தின் குளுக்கோஸ் அளவும் பராமரிக்கப்படுகிறது. வெண்டைக்காய் ஊறவைத்த நீரை குடிப்பது, நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது.

உயிரணு சிதைவு தடுக்கப்படும்:
வெண்டைக்காயில் இருக்கும் பெக்டின் எனப்படும் கரையக்கூடிய நார்சத்து, குடலில் இருக்கும் பித்தநீர் உற்பத்தியை மாற்றி அமைக்கும். இதனால் இரத்தத்தில் இருக்கும் கேடான கொழுப்புகளின் அளவு என்பது மாறுபடும். இதில் இருக்கும் ஆண்டி-ஆக்சிடன்ட் உயிரணுக்கு ஆக்சிஜனேற்ற குறைபாடுகள் இருந்தால், அதனை சரி செய்கிறது. புற்றுநோய் அபாயமும் கட்டுப்படுத்தப்படுகிறது. உயிரணு சிதைவுக்கு காரணமாக அமைக்கும் ப்ரீ ரேடிக்கல் அழிக்கப்படுகிறது. ஒமேகா 3, ஓம்கா 6 போன்றவை நினைவாற்றலை அதிகரிக்கிறது. Astrology: 2025 ஆம் ஆண்டு பரணி நட்சத்திரகாரர்களுக்கு எப்படி இருக்கும்? விபரம் உள்ளே..!
குடல்நலன் மேம்படும்:
ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக ஏற்படும் ஒற்றைத் தலைவலி சார்ந்த பிரச்சனையை வெண்டைக்காய் குறைகிறது. நார்சத்து குடல் செரிமான மண்டலத்தை மேம்படுத்துகிறது. இரைப்பை சார்ந்த பிரச்சனைகளுக்கும் தேர்வு கொடுக்கிறது. வீக்கம், மலச்சிக்கல், வாயு, தசைப்பிடிப்பு போன்ற குடல் சார்ந்த பிரச்சனையும் சீராகும். ஆஸ்துமா சார்ந்த பிரச்சனையை தடுக்கும் வல்லமையும் வெண்டைக்காய்க்கு உண்டு.
சோர்வு, கவலை, வயிற்றுப்பிடிப்பு, தலைவலி, முதுகு வலி, வீக்கம், அடிக்கடி சிறுநீர் வெளியேறுவது, மாதவிடாய்க்கு முன்னான அறிகுறிகளின் தீவிரத்தை கட்டுப்படுத்துதல் என பல நன்மைகளை கொண்டுள்ளது. மனஅழுத்தம், எரிச்சல் ஆகியவற்றையும் குறைக்கிறது. உடலுக்கு பல நன்மைகளை வழங்கும் வெண்டைக்காயை, சுழற்சி முறையில் உணவில் சேர்த்துக்கொள்வது நன்மையை வழங்கும்.
(The above story first appeared on LatestLY on Nov 25, 2024 08:25 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

