Rishabh Pant | IPL Cup (Photo Credit: @IPL / @ANI X)

நவம்பர் 24, சவூதி அரேபியா (Cricket News): இந்தியாவில் நடைபெறவுள்ள டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) போட்டிகள், மார்ச் மாதம் 14ம் தேதியில் தொடங்கி, தொடங்கி மே மாதம் 25ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்த போட்டிகளுக்கான ஏலம், சவுதி அரேபியாவில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. 150 க்கும் அதிகமான போட்டியாளர்களை, ஐபிஎல் அணிகள் (IPL Audition) ஏலத்தில் எடுக்க முற்பட்டு வரும் நிலையில், சுமார் 1000 க்கும் அதிகமான வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இவர்களை ஏலத்தில் போட்டி போட்டு அணிகள் தேர்வு செய்து வருகிறது. IND Vs AUS 1st Test: யஷஸ்வி ஜெய்ஸ்வால் - கேஎல் ராகுல் அபாரம்.. 2ஆம் நாள் முடிவில் இந்தியா 218 ரன்கள் முன்னிலை..!

தற்போது வரை ஏலம் எடுக்கப்பட்டுள்ள முக்கிய வீரர்கள்:

அதன்படி தற்போதுவரை ஷ்ரேயஸ் ஐயர் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ரூ.26.75 கோடிக்கும், மிட்செல் ஸ்டார்க் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக ரூ.11.75 கோடிக்கும், ஜோஸ் பட்லர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ரூ.15.75 கோடிக்கும், அர்ஷிதீப் சிங் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ரூ.18 கோடிக்கும், காகிஸோ றபாடா குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ரூ.10.75 கோடிக்கும், முகம்மது சமி சன் ரைஸஸ் ஹைதராபாத் அணிக்காக ரூ.10 கோடிக்கும், டேவிட் மில்லர் லக்னோ அணிக்காக ரூ.7.5 கோடிக்கும் ஏலத்தில் எடுத்துள்ளன.

அதிக விலைக்கு வாங்கப்பட்ட ரிஷப்:

இந்நிலையில், ரிஷப் பண்ட் (Rishabh Pant) லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் (Lucknow Super Giants) அணிக்காக ரூ.27 கோடி தொகையில் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் ஷ்ரேயாஸ் ஐயர் அதிக தொகை கொடுத்து சற்றுமுன் வாங்கப்பட்ட நிலையில், அடுத்த சில நிமிடங்களில் லக்னோ அணி ரிஷப்பை ரூ.27 கொடுத்து எடுத்துள்ளது. அவரை தேர்வு செய்ய லக்னோ - ஐதராபாத் அணிகள் இடையே கடும் போட்டியும் நிலவியது. இந்திய கிரிக்கெட் அணிக்காக விக்கெட் கீப்பிங்கில் சிறந்து விலகிய ரிஷப், கடந்த சீசனில் டெல்லி அணிக்காக விளையாடி இருந்தார். தற்போது லக்னோ அணி அவரை ஏலத்தில் எடுத்துள்ளது.

ரிஷப் பண்ட் ரூ.27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்: