நவம்பர் 23, சென்னை (Chennai News): தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியயது. இந்த சுழற்சி இன்று நவ. 23 ஆம் தேதி, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த இரு தினங்களில் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தனது நாளைய வானிலை (Tomorrow Weather) செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இன்று (நவ.23, 2024) காலை 10 மணிவரையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மிதமான இடி-மின்னலுடன் கூடிய மழைக்கான வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. வானிலை: வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி; நாளைய வானிலை நிலவரம் என்ன?.. விபரம் உள்ளே.!

காலை 10 மணிவரை மழை தொடர்பான வானிலை (Weather) ஆய்வு மையத்தின் அறிவிப்பு:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)