நவம்பர் 21, மஹபூபாபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலம், மஹபூபாபாத் (Mahabubabad) மாவட்டம் சிரோலு மண்டல் மையத்தில் வாலிபர் ஒருவர், குரங்குக்கு சிபிஆர் சிகிச்சை (CPR Treatment) அளித்து உயிரைக் காப்பாற்றினார். வைரலான இந்த வீடியோவில், ஒரு குரங்கு மின்சாரம் தாக்கி கீழே விழுந்தது. ஆனால், குரங்கு இறந்துவிட்டதாக நினைத்து நாகராஜு என்ற வாலிபர் அதற்கு உடனே சிபிஆர் சிகிச்சை அளித்தார். சிறிது நேரம் கழித்து இறந்துவிட்டதாக கருதிய குரங்கு, சற்று நேரத்தில் திடீரென எழுந்து சென்றது. அதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. Road Accident: லாரி மீது டபுள் டெக்கர் பேருந்து மோதி கோர விபத்து; 5 மாத குழந்தை உட்பட 5 பேர் பலி..!

வீடியோ இதோ:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)