நவம்பர் 07, பெங்களூரு (Karnataka News): கர்நாடக மாநிலம், பெங்களூருவை (Bengaluru) சேர்ந்தவர் ஒப்லெஸ். இவர் பிஎம்டிசி (BMTC) பேருந்து நடத்துனராக வேலை பார்த்து வருகிறார். இதே பேருந்தில் ஓட்டுநராக (Bus Driver) இருப்பவர் கிரண் குமார் (வயது 40). இவர்கள் இருவரும் நண்பர்கள் ஆவார்கள். இதனிடையே, நேற்று (நவம்பர் 06) நெலமங்களாவில் இருந்து தாசனப்புரா பகுதியில் கிரண் குமார் பேருந்தை ஓட்டிச் சென்றுக் கொண்டிருந்தபோது, திடீரென கிரண் குமாருக்கு நெஞ்சு வலி (Heart Attack) ஏற்பட்டு சரிந்து விழுந்தார். 25 Tigers Missing: 25 புலிகள் மாயம்.. தேசிய பூங்காவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.!
இதனால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தொடர்ந்து ஓடிய நிலையில், முன்னால் சென்ற பேருந்தின் பக்கவாட்டில் மோதி, தொடர்ந்து சாலையில் ஓடியது. பதறிப்போன நடத்துனர் ஒப்லெஸ், விரைந்து வந்து பேருந்தை நிறுத்தினார். இதனையடுத்து, தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது, அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, கிரண் குமார் பணியின்போதே மரணம் அடைந்த அதிர்ச்சி காணொளி வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
பேருந்து ஓட்டுநர் மாரடைப்பால் உயிரிழப்பு:
एक और अचानक मौत...
बेंगलुरु में सरकारी बस के ड्राइवर किरण कुमार को बस चलाते वक्त हार्ट अटैक आया और उनकी मौत हो गई।
कंडक्टर ने सूझबूझ से बस पर काबू पाया और लोगों की जान बचाई। #Livedeath #heartattack pic.twitter.com/cdAlH5VhRP
— Vinay Saxena (@vinaysaxenaj) November 7, 2024