IND Vs ENG 3rd T20I 2025: இந்திய அணி படுதோல்வி.. இலக்கை நெருங்க இயலாமல் திணறிய வீரர்கள்.. இங்கிலாந்து முதல் மாஸ் வெற்றி.!

குஜராத்தில் நடைபெற்ற ஆட்டத்தில், இங்கிலாந்து அணியின் அசத்தல் ஆட்டமும், அதிரடி பந்துவீச்சும், இந்திய மண்ணில் 2025 டி20 போட்டியில் முதல் வெற்றிக்கு வழிவகை செய்தது.

IND Vs ENG 3rd T20I 2025: இந்திய அணி படுதோல்வி.. இலக்கை நெருங்க இயலாமல் திணறிய வீரர்கள்.. இங்கிலாந்து முதல் மாஸ் வெற்றி.!
IND Vs ENG T20I 2025 (Photo Credit: @BCCI X)

ஜனவரி 28, ராஜ்கோட் (Sports News): இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணி (Team England), 5 டி20 போட்டிகள் (India Vs England T20i Series 2025) மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் (IND Vs ENG ODI Series 2025) இந்திய கிரிக்கெட் அணியை எதிர்கொண்டு களம்காண்கிறது. இந்த தொடரில் டி20 ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டி20 (India Vs ENG T20 1st Match 2025) ஆட்டத்திலும், சென்னையில் நடைபெற்ற இரண்டாவது டி20 ஆட்டத்திலும் (IND Vs ENG T20i 2nd Match 2025), இந்திய கிரிக்கெட் அணி அசத்தல் வெற்றி அடைந்தது. அதனைத்தொடர்ந்து, மூன்றாவது போட்டி, 28 ஜனவரி 2025 இன்று, குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த போட்டிகளை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports), ஓடிடியில் ஹாட் ஸ்டார் (Disney Hotstar)ல் நேரலையில் பார்க்கலாம். Varun Chakravarthy: 4 ஓவரில் 5 விக்கெட்.. ஒரே மேட்சில் உச்சம் தொட்ட வருண் சக்கரவர்த்தி..! குவியும் பாராட்டுக்கள்.! 

இந்திய அணி முதல் தோல்வி:

இங்கிலாந்து அணியின் சார்பில் விளையாடிய பென் டக்கட் 28 பந்துகளில் 51 ரன்னும், ஜோஸ் பட்லர் 22 பந்துகளில் 24 ரன்னும், லிவிங் ஸ்டோன் 24 பந்துகளில் 43 ரன்னும் அதிகபட்சமாக அடித்திருந்தனர். ஆட்டத்தின் முடிவு 20 ஓவர்களில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 9 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து, 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கி இருந்தது. இந்திய அணியின் சார்பில் விளையாடிய சஞ்சு சாம்சன் 6 பந்துகளில் 3 ரன்கள் எடுத்தும், அபிஷேக் 14 பந்துகளில் 24 ரன்னும் எடுத்து அவுட்டாகி வெளியேறி இருந்தனர். தொடக்க ஆட்டக்காரர்கள் அவுட் ஆகியது அணிக்கு அதிர்ச்சி கொடுக்க, சூரியகுமார் 14 ரன்னிலும், திலக் 18 ரன்னிலும் என முக்கிய விக்கெட்டுகள் அடுத்தடுத்து பறிபோனது. ஹர்திக் பாண்டியா 35 பந்துகளில் 40 ரன்களை அடித்து அணியின் ரன்களை உயர்த்த போராடினாலும், அடுத்தடுத்த விக்கெட்டுகள் சரிந்தது. இதனால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்த இந்திய அணி 145 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால் 26 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெற்றி அடைந்தது. இங்கிலாந்து அணியின் சார்பில் பந்துவீசியவர்களில் ஜேமி ஓவர்டன் 3 விக்கெட்டையும், ஜோப்ரா, ப்ரைடன் தலா 2 விக்கெட்டையும் கைப்பற்றி இருந்தனர். இந்திய அணி பந்துவீசியபோது வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளையும், ஹர்திக் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தனர்.

இந்த வெற்றியின் வாயிலாக இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 டி20 போட்டிகளில் 2 - 1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் இருந்தாலும், இங்கிலாந்து அணி தனது முதல் வெற்றியை அடைந்துள்ளது. இதனால் இந்திய கிரிக்கெட் அணி எஞ்சிய போட்டியில் அல்லது இரண்டில் ஒன்றில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Jan 28, 2025 10:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).