Varun Chakravarthy: 4 ஓவரில் 5 விக்கெட்.. ஒரே மேட்சில் உச்சம் தொட்ட வருண் சக்கரவர்த்தி..! குவியும் பாராட்டுக்கள்.!

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் வியக்கும் வண்ணம், ஒரே போட்டியில் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருப்பது கவனத்தை பெற்றுள்ளது. கிரிக்கெட் அப்டேட்களை (Cricket News Tamil) பெற லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தை பின் தொடருங்கள்.

Varun Chakravarthy: 4 ஓவரில் 5 விக்கெட்.. ஒரே மேட்சில் உச்சம் தொட்ட வருண் சக்கரவர்த்தி..! குவியும் பாராட்டுக்கள்.!
Varun Chakravarthy (Photo Credit: @MidnightMusinng / @TheDhoniEra X)

ஜனவரி 28, ராஜ்கோட் (Sports News): இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணி (Team England), 5 டி20 போட்டிகள் (India Vs England T20i Series 2025) மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் (IND Vs ENG ODI Series 2025) இந்திய கிரிக்கெட் அணியை எதிர்கொண்டு களம்காண்கிறது. இந்த தொடரில் டி20 ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டி20 (India Vs ENG T20 1st Match 2025) ஆட்டத்திலும், சென்னையில் நடைபெற்ற இரண்டாவது டி20 ஆட்டத்திலும் (IND Vs ENG T20i 2nd Match 2025), இந்திய கிரிக்கெட் அணி அசத்தல் வெற்றி அடைந்தது. அதனைத்தொடர்ந்து, மூன்றாவது போட்டி, 28 ஜனவரி 2025 இன்று, குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த போட்டிகளை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports), ஓடிடியில் ஹாட் ஸ்டார் (Disney Hotstar)ல் நேரலையில் பார்க்கலாம். IND Vs ENG 3rd T20i: இந்தியா - இங்கிலாந்து டி20 3 வது ஆட்டம்.. இந்திய அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து.. அசத்தல் பேட்டிங்.! 

இந்திய அணிக்கு 172 ரன்கள் இலக்கு:

இங்கிலாந்து அணியின் சார்பில் விளையாடிய பென் டக்கட் 28 பந்துகளில் 51 ரன்னும், ஜோஸ் பட்லர் 22 பந்துகளில் 24 ரன்னும், லிவிங் ஸ்டோன் 24 பந்துகளில் 43 ரன்னும் அதிகபட்சமாக அடித்திருந்தனர். ஆட்டத்தின் முடிவு 20 ஓவர்களில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 9 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து, 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கி இருக்கிறது.

IND Vs ENG 3rd T20I 2025 (Photo Credit: @BCCI X)
IND Vs ENG 3rd T20I 2025 (Photo Credit: @BCCI X)

5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்திய வருண் சக்கரவர்த்தி (Varun Chakravarthy 5 Wickets):

இந்நிலையில், இந்த ஆட்டத்தில் வருண் சக்கரவர்த்தி, தனது பந்துவீச்சில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். அவர் வீசிய 4 ஓவரில் (24 பந்துகள்), எதிர் அணியை 24 ரன்கள் மட்டுமே அடிக்க வாய்ப்பு கொடுத்தவர், 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி இருந்தார். ஜோஸ் பட்லர் 9 வது ஓவர், ஜேம் ஸ்மித் 13.3 வது ஓவர், ஜேமி ஓவர்டன் 13.4 வது ஓவர், ப்ரைடன் கார்ஸ் 15.4 வது ஓவர், ஜோப்ரா ஆர்ச்சர் 16 வது ஓவர் என 5 முக்கிய விக்கெட்டுகள் வருண் சக்கரவர்தியால் கைப்பற்றப்பட்டது. இவர்களில் ஆர்ச்சர், ஓவர்டன் ஆகியோர் போல்ட் அவுட்டாகி வெளியேறினர். வருண் சக்கரவர்த்தி தான் விளையாடிய 10 ஆட்டங்களில், மொத்தமாக 27 விக்கெட்டை வீழ்த்தி கவனம் பெற்று இருக்கிறார். அவருக்கு ரசிகர்களின் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

வருண் சக்கரவர்த்தியை வாழ்த்தி ரசிகரின் பதிவு:

இந்த நாளுக்கான மனிதராக உயர்ந்த வருண் சக்கரவர்த்தி:

ஒரே ஓவரில் 2 விக்கெட் வீழ்த்திய வருண்:

(The above story first appeared on LatestLY on Jan 28, 2025 09:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).