Fire Breakout in Gujarat: குஜராத்தில் பாம்பே மார்க்கெட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து.!: சம்பவ இடத்தில் 12 தீயணைப்பு படைகள்.!
குஜராத் மாநிலத்தின், சூரத் மாவட்டத்தில் இருக்கும் பாம்பே மார்க்கெட்டில் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. 10-12 தீயணைப்பு படைகள் தொடர்ந்து போராடி, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றனர்.
அக்டோபர் 03, சூரத் (Gujarat News): குஜராத்தின் சூரத் (Surat) மாவட்டத்தில் இருக்கும் பாம்பே மார்க்கெட்டின் (Bombay Market) கடை ஒன்றில் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. தீ பரவத் தொடங்கியதும் அங்கிருந்த மக்கள் கடையிலிருந்து வெளியேற விரைந்து ஓட்டம் பிடித்தனர்.
இந்த விபத்தில் மார்க்கெட்டில் இருக்கும் மற்ற கடைகளும் சேதமடைந்து இருக்கிறது. தீ பரவிய மற்ற கடைகள், மார்க்கெட்டின் குறுகலான பகுதியில் அமைந்திருந்ததாக கூறப்படுகிறது. MS Dhoni Classic Look: பெண்களின் க்ரஸ் மெட்டிரியலாக மாறிய தல தோனி: திடீர் கிளாசிக் லுக் இதோ.!
“முன்னதாக 5 தீயணைப்பு படை வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை கட்டுப்படுத்த முயன்றனர். பின்னர், ஏறக்குறைய 12 தீயணைப்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்ததால் தான், நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடிந்தது.
#WATCH | Gujarat: A massive fire breaks out at Bombay Market in Surat. Fire tenders present at the spot. More details are awaited. pic.twitter.com/fk0egFBn94
— ANI (@ANI) October 3, 2023
தீ ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை மற்றும் இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.” என்று சூரத் மாநகராட்சியின் தலைமை தீயணைப்பு அதிகாரி தெரிவித்திருக்கிறார்.
(The above story first appeared on LatestLY on Oct 03, 2023 02:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

