India Pakistan Conflict: இந்தியா மீதான பயங்கரவாத தாக்குதல் இனி போராகவே கருதப்படும்? - மத்திய அரசு.!

இந்தியாவின் மீது இனி தாக்குதல் நடத்தக்கூடாது என்ற எண்ணத்தில் மத்திய அரசு அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

PM Modi / Govt of India (Photo Credit: ANI / Wikipedia)

மே 10, புதுடெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் போர் காரணமாக இருநாடுகளின் எல்லைப்பகுதியிலும் பதற்றம் நிலவி வருகிறது. பகல்ஹாமில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய வன்முறை சம்பவத்துக்கு பழிவாங்க, பயங்கரவாதிகளின் நிலைகள் குறிவைத்து தாக்கப்பட்டன. இதில் 100 க்கும் மேற்பட்டோர் பலியாகி இருந்தனர்‌. பயங்கரவாதிகளுக்கு துணையாக இருக்கும் பாகிஸ்தான் இந்தியாவின் மீது தாக்குதல் நடத்தி போரைத்தொடங்கியது.

கடுமையான நடவடிக்கை :

இதனால் இருதரப்பும் தற்போது சரிக்கு சமமாக மோதி வருகிறது. இந்தியா தனது படை பலத்தை காண்பித்து பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில், மத்திய அரசு இந்தியா மீது நடத்தப்படும் தாக்குதல் குறித்து முக்கிய முடிவை எடுத்துள்ளது என கூறப்படுகிறது. அதாவது, இந்தியாவின் மீது இந்தியாவுக்கு எதிராக நடத்தப்படும் எந்த தாக்குதல் இனி போர் அறிவிப்பாகவே கருத்தப்படும் என்ற முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக அரசுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விசயம் அரசால் சட்டமாக்கப்படும் பட்சத்தில் இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாத செயலை முன்னெடுக்கும் அமைப்புகள், நாடுகள் மீது கடுமையான பதிலடி நடவடிக்கை எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement