Panipat Gangrape: குடும்ப உறுப்பினர்கள் முன் 4 பேர் கும்பலால் 3 பெண்கள் கூட்டுப்பாலியல் வன்கொடுமை., ஒருவர் பலி.. ஒரேகிராமத்தில் கொள்ளைக்கும்பலால் பயங்கரம்.!
நள்ளிரவு நேரத்தில் ஒரே கிராமத்தில் அடுத்தடுத்து நடந்த துயரங்கள், அதனால் ஏற்பட்ட மரணங்கள் குடும்பத்தினரை மட்டுமல்லாது கிராமத்தினரையும் அதிர்ச்சியுற வைத்துள்ளது.
செப்டம்பர் 21, சண்டிகர் (Haryana News): ஹரியானா மாநிலத்தில் உள்ள பானிபட், மட்லாடா பகுதியில் புலம்பெயர்ந்த தொழிலாளர் குடும்பம் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று வீட்டில் குழந்தைகள், 35 வயதுடைய பெண்ணின் கணவர், 24, 25 மற்றும் 35, 45 வயதுடைய 4 பெண்கள் உறங்கிக்கொண்டு இருந்துள்ளனர்.
நள்ளிரவு ஒரு மணியளவில் வீட்டிற்குள் திடீரென புகுந்த கொள்ளை கும்பல், பயங்கர ஆயுதத்துடன் குழந்தை மற்றும் கணவரின் கழுத்தில் கத்தி வைத்து தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
இதனை எதிர்த்த 45 வயது மதிக்கத்தக்க பெண்ணின் மீது நடத்திய சரமாரி தாக்குதலால், அவர் நிகழ்விடத்திலேயே (Panipat Gangrape News) பரிதாபமாக மயங்கி விழுந்து உயிரிழந்தார். அவர் ஏற்கனவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், தாக்குதலின் காரணமாக பலியாகினர். Salem Crime: கள்ளகாதலியின் கணவரை போட்டுத்தள்ளி, மீண்டும் சிறைப்பறவையான வளையல் கடை உரிமையாளர்; அடுத்தடுத்து பதறவைக்கும் 2 கொலை.!
கத்தி முனையில் வீட்டில் இருந்த செல்போன், ரூ.16 ஆயிரம் பணம் உட்பட பலவற்றை பறித்துக்கொண்டு கும்பல், வீட்டில் இருந்த பிற 3 பெண்களை குடும்பத்தினர் கண்முன்னே கூட்டுப்பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கியது.
கையில் பயங்கர ஆயுதத்துடன் மிரட்டி தனது காம இச்சையை தீர்த்துக்கொண்ட கும்பல், அங்கிருந்து வெளியே புறப்பட்டு சென்று அதே கிராமத்தில் மற்றொரு வீட்டிலும் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி சென்றிருக்கிறது.
நள்ளிரவில் நடந்த கொடுமை, கொலையால் நிலைகுலைந்துபோன குடும்பத்தினர் சம்பவம் தொடர்பாக அதிகாலையில் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், பலியான பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து புகாரை பெற்ற அதிகாரிகள், கொள்ளை மற்றும் கற்பழிப்பு குற்றத்தை அரங்கேற்றிய கும்பலுக்கு வலைவீசி இருக்கின்றனர். நள்ளிரவு நேரத்தில் ஒரே கிராமத்தில் அடுத்தடுத்து நடந்த துயரங்கள், அதனால் ஏற்பட்ட மரணங்கள் குடும்பத்தினரை மட்டுமல்லாது கிராமத்தினரையும் அதிர்ச்சியுற வைத்துள்ளது.