Bagalkot Shocker: சிறுமியை பள்ளி வளாகத்தில் நிர்வாணப்படுத்தி சோதனைப்போட்ட ஆசிரியர்கள்; மனமுடைந்த சிறுமி தற்கொலை.!

கேட்கவே நெஞ்சை பதறவைக்கும் துயரத்தை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

Suicide File Pic (Photo Credit: Pixabay)

மார்ச் 18, பெங்களூர் (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், பாகல்கோட் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் பயின்று வருகிறார். சம்பவத்தன்று ஆசிரியர் ஒருவர் வைத்திருந்த ரூ.2000 பணம் மாயமானதாக தெரியவருகிறது. இதனால் அதனை ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் சேர்ந்து தேடி இருக்கின்றனர். பணத்தை திருடியதாக 14 வயதுடைய சிறுமி மற்றும் அவருடன் பயின்று வரும் 4 சிறுமிகளின் மீது ஆசிரியர்கள் சந்தேகித்துள்ளனர். Car Tractor Accident: கார் - டிராக்டர் மோதி பயங்கர விபத்து; 3 குழந்தைகள் உட்பட 7 பேர் பரிதாப பலி.! திருமண வீட்டாருக்கு நேர்ந்த சோகம்.! 

நிர்வாணமாக்கி சோதனை, கோவிலில் சத்தியம்: அவர்கள் பணத்தை திருடவில்லை என்பதை சோதிக்க, சிறுமிகளின் ஆடையை களைந்து நிர்வாணப்படுத்தி சோதனை நடந்ததாக தெரியவருகிறது. இதன்பின், சிறுமிகளை ஆடையை அணியச்சொல்லி, அங்குள்ள கோவிலுக்கு அழைத்துச்சென்று சாமி முன்பு சத்தியம் செய்யச்சொல்லி அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், வீட்டிற்கு சென்ற 5 சிறுமிகளில், 14 வயதுடைய சிறுமி மட்டும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். Singer Mangli Satyavathi Rathod: கார் விபத்தில் சிக்கிய பிரபல நடிகை.. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.! 

மனஉளைச்சலில் தற்கொலை: இதனால் கடந்த இரண்டு நாட்களாகவே தனிமையில் தவித்துவந்த சிறுமி, இறுதியில் தனது உயிரை மாய்த்துக்கொண்டார். சிறுமியின் மூத்த சகோதரியும் அதே பள்ளியில் பயின்றுவரும் நிலையில், சிறுமியின் தற்கொலைக்கு பின்னர் அனைத்தும் அம்பலமாகி இருக்கிறது. இதனிடையே, விஷயம் காவல் துறையினருக்கும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள தொடங்கி இருக்கின்றனர்.

இவ்விவகாரத்திற்கு கடுமையான கண்டனங்கள் குவிந்து வருகின்றன.