Youth Died in Bangalore: நண்பனின் மலக்குடலில் வெப்பக்காற்றை செலுத்தியதால் சோகம்; 24 வயது இளைஞர் கொடூர மரணம்.!

நண்பர்கள் இருவர் பேசிக்கொண்டு விளையாடியது, இறுதியில் ஒருவரின் மரணத்திற்கு வழிவகை செய்துள்ளது. இன்முறுவலுடன் பேசிய நண்பரின் ஆசனவாயில் வெப்பக்காற்றை செலுத்தி விளையாட்டை வினையாக மாற்றிய நபரின் செயலை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Youth Died in Bangalore: நண்பனின் மலக்குடலில் வெப்பக்காற்றை செலுத்தியதால் சோகம்; 24 வயது இளைஞர் கொடூர மரணம்.!
Victim Yogesh & Accuse Murali (Photo Credit: @achyutha X)

மார்ச் 29, பெங்களூர் (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு, சம்பிகேஹள்ளி பகுதியை சேர்ந்தவர் யோகேஷ் (வயது 24). இவரின் நண்பர் முரளி (வயது 25). அங்குள்ள சிஎன்எஸ் இருசக்கர வாகனம் பழுதுபார்க்கும் நிறுவனத்தில் முரளி வேலை பார்த்து வருகிறார். கடந்த மார்ச் 25ம் தேதி இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட பழுதை நீக்க யோகேஷ் முரளியின் நிறுவனத்திற்கு சென்றுள்ளார்.

ஆசனவாயில் செலுத்தப்பட்ட (Blowing Hot Air into a Friend's Rectum) வெப்பக்காற்று: அங்கு முரளி இருசக்கர வாகனங்களை சுத்தம் செய்து, சூடான காற்றை வெளியிடும் பிலோவ் டிரையர் கொண்டு வாகனத்தை சுத்தம் செய்துள்ளார். பின் நண்பருடன் விளையாட்டுத்தனமாக பேசிக்கொண்டு இருந்த முரளி, யோகேஷின் முகத்தில் வெப்பக்காற்றை காண்பித்துள்ளார். நண்பர்கள் இருவரும் சிரித்து பேசியபடியே தங்களின் செயல்பகளை வெளிப்படுத்த, யோகேஷின் ஆசன வாயில் முரளி சற்றும் எதிர்பாராத விதமாக வெப்பக்காற்றை செலுத்தி இருக்கிறார். இதனால் உடலில் வெப்பக்காற்று பாய்ந்து, நிகழ்விடத்திலேயே யோகேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். RR Vs DC Highlights: போராடி தோற்ற டெல்லி; அடித்து ஆடியும் இலக்கை எட்டமுடியாததால் சோகம்; சொந்த மண்ணில் அடுத்த வெற்றி படைத்த ஆர்ஆர்.!

உடல் உள்ளுறுப்புகள் செயலிழந்து சோகம்: மயங்கி விழுந்தவரை மீட்ட முரளி அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று விபரத்தை கூறியபோது, அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அப்போது யோகேஷின் மரணம் உறுதி செய்யப்பட்டது. அவரின் உடல் உள்ளுறுப்புகள் சேதமாகி மரணம் ஏற்பட்டு இருக்கிறது என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த சம்பிகேஹள்ளி காவல் துறையினர், இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 304ன் கீழ் வழக்குப்பதிந்து முரளியை கைதுசெ எய்தனர். அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பிரேத பரிசோதனையில் யோகேஷின் உடல் உறுப்புக்கள் சேதமாகியதால் மரணம் ஏற்பட்டது தெரியவந்தது.

மறைந்த இளைஞர் யோகேஷ் விஜயபுரா பகுதியில் டெலிவரி ஏஜெண்டாக பணியாற்றி வந்துள்ளார். அவரின் பாட்டி தனிசந்திராவுடன் வசித்து வந்துள்ளார்.

(The above story first appeared on LatestLY on Mar 29, 2024 09:57 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).