IPL 2024 RR Vs DC (Photo Credit: @IPL @2024)

மார்ச் 29, ஜெய்பூர் (Cricket News): ஐபிஎல் 2024 (IPL 2024) தொடரின் 9வது ஆட்டம் நேற்று ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் சவாய் மன்சிங் கிரிக்கெட் மைதானத்தில் இரவு 07:30 மணியளவில் தொடங்கி நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல் (RR Vs DC) அணி மோதிக்கொண்டன. ஆட்டத்தின் தொடக்கத்தில் டாஸ் வென்ற டெல்லி கேoப்பிட்டல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, முதலில் ராஜஸ்தான் ராயல் அணி களமிறங்கியது. அந்த அணியின் சார்பில் விளையாடிய ரியான் பிரயாக் 45 பந்துகளில் 84 ரன்கள் அடித்து விளாசி இருந்தார். மொத்தமாக அவர் ஆறு சிக்ஸர், 7 பவுண்டரிகளும் அடித்திருந்தார். ரவிச்சந்திரன் அஸ்வின் 19 பந்துகளில் 29 ரன்கள் அடித்திருந்தார். எஞ்சிய வீரர்கள் அனைவரும் சொற்பரன்களில் வெளியேறினாலும், அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்திருந்தது.

போராடி தோற்ற டெல்லி கேபிட்டல்ஸ்: டெல்லி அணியின் சார்பில் பந்து வீசியவர்களில் அகமத், முகேஷ் குமார், அக்சர் படேல், அன்ரிச் ஆகியோர் தலா ஒரு விக்கெட் என அனைவரும் ஐந்து விக்கெட்டை கைப்பற்றி இருந்தனர். அதனைத்தொடர்ந்து, 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி, முதலில் அடித்து ஆடினாலும் இறுதியில் இலக்கை எட்ட முடியாமல் தோல்வியடைந்தது. டெல்லி அணியின் சார்பில் விளையாடியவர்களில் டேவிட் வார்னர் 34 பந்துகளில் 49 ரன்னும், திரிஷ்ணன் 23 பந்துகளில் 44 ரன்னும் அதிகபட்சமாக அடித்து இருந்தனர். எஞ்சிய வீரர்கள் சொற்பரன்களில் வெளியேறியதால், இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு டெல்லி அணி 173 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் ராஜஸ்தான் ராயல் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. ஆட்டத்தின் நாயகனாக ரியான் பிரயாக் தேர்வு செய்யப்பட்டார்.

நன்றே பர்கரின் அசத்தல் பந்துவீச்சு:

டேவிட் வார்னரின் விக்கெட்டை கைப்பற்றிய சந்தீப் ஷர்மா:

ஆவேஷ் கானின் உணர்ச்சிபூர்வமான இறுதி நிமிடங்கள்: